Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவில் மணிக்கூட்டுக் கோபுரத்தை அமைக்கக்கோரிய ரவிகரன் : பேருந்து நிலையத்தில் டிஜிட்டல் காட்சிப் பலகை பொருத்தப்படுமென அமைச்சர் பிமல் பதில் 

August 21, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலுக்கு ஆதரவான சுமந்திரனின் கருத்து: கவலை தெரிவித்த பிமல்

முல்லைத்தீவு நகரில் மணிக்கூட்டுக் கோபுரமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடையும்போது, அங்கு நேரத்தைக் காண்பிக்கும் டிஜிட்டல் காட்சிப் பலகையொன்றை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைச்சர் விமல் ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

குறிப்பாக கடந்த 07.07.2026 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சுசார் ஆலேசனைக்குழுக்கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அருகிலுள்ள வீதிச் சுற்றுவளைவில் மணிக்கூட்டுக்கோபுரமொன்று அமைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையினை நான் முன்வைத்திருந்தேன்.

இந்நிலையில் மணிக்கூட்டுக் கோபுரம் என்பது ஒரு பழைய நடைமுறை எனத் தெரிவித்த அமைச்சர் விமல் ரத்நாயக்க, நேரத்தைக் காண்பிக்கும் டிஜிட்டல் காட்சிப் பலகை ஒன்றினை பொருத்துவோமா எனக் கேட்டிருந்தார். நான் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தேன்.

அதனைத்தொடர்ந்து மணிக்கூட்டுக்கோபுரமொன்றை அமைப்பதற்கு பதிலாக, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் நேரத்தைக் காண்பிக்கும் டிஜிட்டல் காட்சிப் பலகை ஒன்றினை பார்வைக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் தலைமை அதிபதிக்கு அமைச்சர் விமல் ரத்நாயக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகை ஒன்றினை பார்வைக்கு வைப்பது என்ற கடந்த கூட்டத்தீர்மானத்தின் முன்னேற்றநிலை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அந்தவகையில் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகை ஒன்றினை பார்வைக்கு வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அதற்கான கேள்விகோரல் உள்ளிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடையும்போது, அங்கு நேரத்தைக் காண்பிக்கும் டிஜிற்றல் காட்சிப் பலகை பொருத்தப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் தெரிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதற்காக அமைச்சருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்தேன் – என்றார்

Previous Post

விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி போலி பிரசாரம்: சபையில் தெளிவுபடுத்திய விஜேபால

Next Post

ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் : ஊடக அமைச்சு விண்ணப்பம் கோரல்!

Next Post
ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் : ஊடக அமைச்சு விண்ணப்பம் கோரல்!

ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் : ஊடக அமைச்சு விண்ணப்பம் கோரல்!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : இலங்கை குழாத்தில் இரண்டு மாற்றங்கள்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : இலங்கை குழாத்தில் இரண்டு மாற்றங்கள்

August 21, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவை அலுவல்கள் நேரலை தொடர்பான விவகாரம் : எதிர்க்கட்சி – ஆளுங்கட்சி காரசாரமான விவாதம்

August 21, 2026
ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் : ஊடக அமைச்சு விண்ணப்பம் கோரல்!

ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் : ஊடக அமைச்சு விண்ணப்பம் கோரல்!

August 21, 2026
ரணிலுக்கு ஆதரவான சுமந்திரனின் கருத்து: கவலை தெரிவித்த பிமல்

முல்லைத்தீவில் மணிக்கூட்டுக் கோபுரத்தை அமைக்கக்கோரிய ரவிகரன் : பேருந்து நிலையத்தில் டிஜிட்டல் காட்சிப் பலகை பொருத்தப்படுமென அமைச்சர் பிமல் பதில் 

August 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures