ஆகஸ்ட் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களில் உள்ள சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை உயர்த்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 2026 ஆகஸ்ட் மாதத்துக்கு தற்போதுள்ள விலைகளே செல்லுபடியாகும்.
12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்: ரூ. 4,465
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்: ரூ. 1,792
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்: ரூ. 835
மேற்கண்ட விலைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.













