கொள்ளுப்பிட்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட காலி வீதியிலுள்ள இரவு விடுதி ஒன்றில், எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஆறு வெளிநாட்டுப் பிரஜைகள் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்போது நேற்றிரவு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 27 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பணப் பரிமாற்றத்துடனான சூதாட்ட நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்த போதே, காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













