Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குறைந்த மின்சார நுகர்வோரை பாதிக்காதவாறு கட்டண திருத்தமாம்

May 9, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மின்சாரக் கட்டண உயர்வு குறித்து வெளியான தகவல்!

நாட்டில் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (9) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால், குறைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

புதிய கட்டணத் திருத்தத்தின்படி, 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு சுமார் 18 சதவீதம் வரை கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, ‘நெஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர்’ நிறுவனம் சமர்ப்பித்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

இது தொடர்பாக கொழும்பில் இன்று சனிக்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால், குறைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி, 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு சுமார் 18 சதவீதம் வரை கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில், 180 முதல் 210 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 1,760 ரூபாயும், 210 முதல் 240 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 2,210 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக அறவிடப்படவுள்ளது. அத்துடன் 270 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு 2,600 ரூபாயும், 300 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 3,110 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக விதிக்கப்படவுள்ளதோடு, நுகர்வோர் பயன்படுத்தும் மேலதிக அலகுகளைப் பொறுத்து இத்தொகையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

மின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், மின்சார சபையின் நிதிச் சமநிலையைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தலைவர், அதேவேளை தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டங்களை மின்சாரக் கட்டணத்தில் சேர்த்து பொதுமக்களிடம் வசூலிக்கப் போவதில்லை என ஆணைக்குழு உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பான பொதுமக்களின் வாய்மூலக் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பங்கள் அண்மையில் நிறைவடைந்த நிலையிலேயே இந்த இறுதி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Previous Post

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளது – நாமல்

Next Post

“118” இலக்கையும் கடந்து 120ஐ பெற்று விஜய் சாதனை ; கொண்டாட்டத்தில் த.வெ.க தொண்டர்கள்

Next Post
33 சதவிகித இலக்கு! வரலாற்று சாதனை படைத்த த.வெ.க

“118” இலக்கையும் கடந்து 120ஐ பெற்று விஜய் சாதனை ; கொண்டாட்டத்தில் த.வெ.க தொண்டர்கள்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures