Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களே அவதானம் – நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

May 5, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாளை பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பநிலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மழை ஆகிய இரண்டு வகையான மாறுபட்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (04-05-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பக் குறியீடு (Heat Index) “அவதான நிலை” (Caution Level) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதனால் பொதுமக்கள் வெப்பம் தொடர்பான அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களே அவதானம் - நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை | Heavy Rain And Dangerous Heatwave Alert In Tamil

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இந்த மாறுபட்ட வானிலை காரணமாக, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவைக்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Previous Post

யாழில் பொய்களை பரப்பிய அமைச்சர் பிமல்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures