Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீபச்செல்வனின் நூல் விவகாரம்: அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை

April 23, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தீபச்செல்வனின் நூல் விவகாரம்: அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை

பிரபல எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைத்த விவகாரத்தில் அரசாங்கம் பாரிய தோல்வியைத் தழுவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளரும், வரலாற்றிஞருமான பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எழுத்தாளர் தீபச்செல்வனின் சில நூல்களை சுங்கத் திணைக்களத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளமை தேசிய மக்கள் சக்தி அடைந்த பாரிய தோல்வியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீபச்செல்வனின் நூல் விவகாரம்: அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை | Npp Trying To Oppress The Freedom Of Expression

இது நிலக்கரி ஊழல் மோசடிகளுக்கு நிகரான பாரிய அரசியல் தோல்வியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு உதவிய இரண்டு பிரதான தூண்களுக்கு இந்த நடவடிக்கையின் ஊடாக பாதக நிலை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகிய இரண்டு விடயங்களும் தற்போதைய ஆட்சியாளர்களின் தேர்தல் வெற்றியில் முக்கிய தாக்கத்தை செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி விவகாரத்தில் அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான நிலைபாட்டுக்கு குந்தகம் ஏற்பட்டதாகவும் தீபச்செல்வனின் நூல்களை முடக்கியதன் ஊடாக கருத்துச் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் தொழில்நுட்பப் பிரச்சினை கிடையாது எனுவும் அது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினையாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நூல்களில் தமிழ் கடும்போக்குவாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இது நல்லிணக்கத்தை பாதிக்கும் எனவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளபப்டும் இந்த காலத்தில் நூல்களை தடுப்பது அந்த நூல் பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டக் கூடும் என தெரிவித்துள்ளார்.

இந்த நூல்களின் பீ.டி.எப் வடிவத்தை பலர் இணையத்தில் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் மஹிந்த மற்றும் கோட்டாபய பின்பற்றிய அணுகுமுறையை இந்த அரசாங்கமும் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கமும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற பொறியில் சிக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கலாச்சாரம் தொடர்பான விடயங்களை தேசியப் பாதுகாப்புடன் தொடர்புபடுத்துவது பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதில் அரசாங்கத்தின் பலவீனத்தை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்து நூல்களை விடுவிக்கத் தவறினால் அரசாங்கத்தின் இருப்பினை பாதிக்கக் கூடிய பாரிய அரசியல் பிரச்சினையாக உருவாகக் கூடும் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்திக்காக பிரசாரங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Previous Post

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘ஹாய் ‘ படத்தின் அப்டேட்

Next Post

21 மாவட்டங்களில் நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்ககூடும்

Next Post
நாளை பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

21 மாவட்டங்களில் நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்ககூடும்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures