Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய் நடித்த “ஜன நாயகன்” படம் இணையத்தில் கசிவு ; தேர்தலுக்கு மத்தியில் பெரும் சர்ச்சை ; இயக்குநரின் வேண்டுகோள் 

April 10, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
விஜய் நடித்த “ஜன நாயகன்” படம் இணையத்தில் கசிவு ; தேர்தலுக்கு மத்தியில் பெரும் சர்ச்சை ; இயக்குநரின் வேண்டுகோள் 

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்த “ஜன நாயகன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் இணையத்தில் வெளியானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

படம் இணையத்தில் வெளியானதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதலில் வெறும் 5 நிமிடக் காட்சிகள் மட்டுமே வெளியானதாக கூறப்பட்டது. விஜயின் அறிமுகக் காட்சி, சிறையில் நடக்கும் சண்டைக் காட்சி, எம்.ஜி.ஆர் புகைப்படம் பற்றிய காட்சிகள், “ஒரு பேரே வரலாறு” என்ற பாடல் காட்சிகள் என்பவை வெளியானதாகவும், இன்று (10) அதிகாலை வேளையில் முழு படமும் இணையத்தில் வெளியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

விஜயின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக, அவர் நடிக்கும் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டிருந்த “ஜன நாயகன்” கடந்த ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாவதாக படக்குழு தெரிவித்திருந்தது. எனினும், மதம், பாதுகாப்பு படையினர் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால் தணிக்கை சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகளுக்கு படக்குழுவினர் முகங்கொடுத்து வரும் நிலையில் இதுவரை படம் வெளியாகவில்லை. 

தற்போது விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் இணையத்தில் ஒருசிலரால் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், படம் இணையத்தில் வெளியானது தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், படத்தின் இயக்குநர் எச்.வினோத் கூறுகையில், 

“ஜன நாயகன்” படத்தை யாரும் பகிரவேண்டாம். ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது. அனைத்து தரப்பினரும் படக்குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

அத்துடன் ஜன நாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

விஜய்யின் கடைசிப் படம் எனத் தெரிவிக்கப்பட்டதாலும், படத்தில் சமூக, அரசியல் கருத்துக்கள் பல கூறப்படுவதாலும் ரசிகர்கள் மத்தியில் “ஜன நாயகன்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கும் சூழ்நிலையில், படம் இணையத்தில் வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சைக்குரிய  விடயமாகியிருக்கிறது. 

Previous Post

ஒலிம்பிக் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை முடிவடைகின்றது

Next Post

மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கைது

Next Post
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கைது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures