Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொழில்முறை கிரிக்கெட்டில் பங்குபற்ற மேலும் இருவருக்கு எஸ்எல்சி தடையில்லா சான்றிதழ்

March 23, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தொழில்முறை கிரிக்கெட்டில் பங்குபற்ற மேலும் இருவருக்கு எஸ்எல்சி தடையில்லா சான்றிதழ்

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடைபெறவுள்ள ஐபில் மற்றும் பிஎஸ்எல் ஆகியவற்றில் விளையாட மேலும் இருவருக்கு தடையில்லா சான்றிதழ்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழ்ங்கியுள்ளது.

எனினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் 18 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரணவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்னும் பச்சைக் கொடி காட்டவில்லை.

உடல் திறன் சோதனையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாத்திரமே ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இதற்கு அமைய உடல்திறன் சோதனையில் தேர்ச்சிபெற்ற துஷ்மன்த சமீர, பெத்தும் நிஸ்ஸன்க, கமிந்து மெண்டிஸ் ஆகியோருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடந்தவாரம் தடையில்லா சான்றிதல்களை வழங்கியிருந்தது.

அவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் போட்டியில் பங்குபற்றுவதற்கு துனித் வேல்லாலகேவுக்கு தடையில்லா சான்றிதழை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கியது.

இப்போது ஏஷான் மாலிங்கவுக்கு இண்டியன் பிறீமியர் லீக்கிலும் குசல் மெண்டிஸுக்கு பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலும் விளையாடுவதற்கு தடையில்லா சான்றிதழ்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கியுள்ளது.

எனினும் ரி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னரும் ரி20 உலகக் கிண்ணத்தின்போதும் உபாதைக்குள்ளான நுவன் துஷார, வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரண ஆகிய மூவரும் தொடர்ந்து சிகிச்கையுடன் கூடிய புனர்வாழ்வில் ஈடுபட்டுள்ளதால் இதுவரை அவர்கள் உடல் திறன் பயிற்சிகளில் ஈடுபடவில்லை.

அவர்கள் பூரண தேகாரோக்கியம் பெற்ற பின்னரே உடல் திறன் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்ட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் மூவரும் இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பப் போட்டிகளில் விளையாடுவது சாத்தியம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் லாகூர் காலண்டர்ஸ் அணிக்காக விளையாடவிருந்த தசுன் ஷானக்க, ஐபிஎல் இல் விளையாட தயாராகி வருகிறார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் சுப்பர் லீக் ஏற்பாட்டாளர்களுக்கு அவர் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

இண்டியன் பிறீமியர் லிக்கில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இடம்பெற்ற சாம் கரண் உபாதைக்குள்ளா ன தால் இந்த வருடப் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.

அவரது இடத்தை தசுன் ஷானக்க நிரப்புவார் என அறிவிக்கப்படுகிறது.

ஐபிஎல் இல் ஒப்பந்தமாகி உள்ள இலங்கை வீரர்கள்

Beaches & Islands

பெத்தும் நிஸ்ஸன்க – டெல்ஹி கெப்பிட்டல்ஸ்

மதீஷ பத்திரண – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வனிந்து ஹசரங்க – லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ்

தசுன் ஷானக்க – ராஜஸ்தான் றோயல்ஸ்

நுவன் துஷார – றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு

கமிந்து மெண்டிஸ், ஏஷான் மாலிங்க – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Previous Post

அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் ஈடுபடவில்லை : டொனால்ட் டிரம்ப் அறிக்கைக்கு ஈரான் மறுப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures