விறைப்பான குளிரில் பெண் மரணம்!

விறைப்பான குளிரில் பெண் மரணம்!

கனடா- 53வயது பெண் ஒருவர் வினிபெக் டவுன் ரவுனில் ஞாயிற்றுகிழமை வெப்பநிலை வீழ்ச்சியடைந்து காற்றினால் குளிர்ந்த நிலையில் -32 ஆக காணப்பட்ட போது அறிவற்ற நிலையில் கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.

பொலிசார் வரவழைக்கப்பட்ட போது இவர்சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரியவந்துள்ளது.

இதே போன்று சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சிறிது தூரத்தில் பலர் குளிரினால் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக வினிபெக் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர். இது ஒரு சோகமான நிகழ்வாகும்.

அன்றய வெப்பநிலை காலையில் -24ஆகவும் காற்றுடன் கூடி -32ஆகவும் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

திடீரென வெப்பநிலை வீழ்ச்சியடைந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.குளிர் காலம் ஆரம்பித்து விட்டாலே நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

பொலிசார் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட போதிலும் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்தனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *