Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முகத்தில் நான்கு புள்ளிகள்… சொல்லும் உண்மைகள்…!

December 14, 2016
in News
0
முகத்தில் நான்கு புள்ளிகள்… சொல்லும் உண்மைகள்…!

முகத்தில் நான்கு புள்ளிகள்… சொல்லும் உண்மைகள்…!

ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5, இரவு 11:30 மணிக்குப் பிரிந்தது என அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. அன்று, இரவே இறுதிச்சடங்குகள் போயஸ் கார்டனில் நிறைவேற்றப்பட்டு காலையில் ராஜாஜி ஹாலில் மக்கள் பார்வைக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது. அப்போதுதான் ஜெயலலிதாவின் முகத்தில் நான்கு துளைகள் இருப்பது தெரிய வந்தது.

இந்தத் துளைகள் என்ன என்ற விவாதங்களும், சர்ச்சைகளும் கிளம்பின. அதுமட்டுமில்லாமல் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகும் சற்றும் மாறாமல் நாம் எப்போதும் பார்க்கும் ஜெயலலிதாவாகவே அஞ்சலிக்கு வைக்கப்பட்டதும் மக்களிடையே சந்தேகத்தை ஏற்ப‌டுத்தியது.

‘முகத்தில் இருந்த நான்கு துளைகள், அதே முகம்’ எனப் பல விஷயங்களுக்கு விடை தேடினால் கிடைக்கும் பதில்களில் ஒன்று எம்பாமிங். இது உடலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று.

இதில் உடலில் இருந்து எம்பாமிங் செய்ய உதவும் கருவி மூலம் குறைந்த அழுத்தத்தில் ரத்தம் நீக்கப்பட்டு உடலில் அதே சிறுதுளை மூலமாக பார்மால்டிஹைடு கலந்த திரவம் நிரப்பப்படும்.

இது உடலை உயர் குளிர்நிலையில் வைத்துப் பாதுகாக்கப் பயன்படும். சோவியத் அதிபர் லெனின் உள்ளிட்ட‌ உலகின் முக்கியமான தலைவர்கள் இற‌ந்தபோது இதே போன்ற எம்பாமிங் முறையில்தான் அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டன.

இந்த எம்பாமிங் குறித்து மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘உடலைப் பதப்படுத்தி, பாதுகாக்கத்தான் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

இந்த முறையைப் பயன்படுத்தி பதப்படுத்தப்படும் ஒருவரது உடலைக் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை பாதுகாக்க முடியும்.

ஆனால், உயர் குளிர்நிலையில் உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்படி வைக்க முடிந்தால் ஒருவரது உடலை தாராளமாக மூன்று மாத காலம் வரை எந்த மாற்றமும் இன்று அப்படியே பாதுகாக்க முடியும்.

இதே போலத்தான் ஜெயலலிதாவுக்கும் செய்யப்பட்டது என்றால் மாலை 5 மணிக்கு `முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்ற அறிக்கையை அப்போலோ வெளியிட்டது.

`இரவு 11:30 மணிக்கு இறந்தார்’ என்ற அறிவிப்பு வருகிறது. இரவு 2 மணிக்கெல்லாம் முதல்வர் உடல் மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறது.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எம்பாமிங் செய்யப் பட்டதா? முதல்வரது உடல் காலையில் பார்வைக்கு வைக்கப் பட்டது போல மாலையில் இல்லை.

உடலில் சில மாற்றங்களை மக்களால் உணர முடிந்தது. இதன் பின்னால் என்ன நடந்திருக்கும்? எம்பாமிங் செய்யப்பட்ட உடலை நீணட நேரம் உயர் குளிர்நிலையின்றி வைக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் முதல்வர் உடல் ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது’’ என்றார்.

இதையெல்லாம் தாண்டி எம்பாமிங் செய்யப்பட்ட ஒருவரது உடலை மூன்று மாதங்கள் வரை பாதுகாக்கலாம் என்ற தகவலும், முகத்தில் இருக்கும் துளைகளும் முதல்வர் டிசம்பர் 5 அன்று தான் இறந்தாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தக் கேள்விகளுக்கு பதில் அப்போலோவுக்கும், மன்னார்குடி குடும்பத்தாருக்கும் மட்டுமே தெரியும்!

Tags: Featured
Previous Post

விடுதலைப் புலிகளை அழிக்க எத்தனை கோடி? எத்தனை போராளிகள் கொல்லப்பட்டனர்?

Next Post

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு: விரைவில் வெளியாகும் ரகசியம்?

Next Post
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு: விரைவில் வெளியாகும் ரகசியம்?

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு: விரைவில் வெளியாகும் ரகசியம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures