Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விடுதலைப் புலிகளை அழிக்க எத்தனை கோடி? எத்தனை போராளிகள் கொல்லப்பட்டனர்?

December 14, 2016
in News
0
விடுதலைப் புலிகளை அழிக்க எத்தனை கோடி? எத்தனை போராளிகள் கொல்லப்பட்டனர்?

விடுதலைப் புலிகளை அழிக்க எத்தனை கோடி? எத்தனை போராளிகள் கொல்லப்பட்டனர்?

இலங்கையின் உள்நாட்டு போர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், அதற்காக பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இதற்குள் சந்தர்ப்ப செலவு பற்றிய மதிப்பீட்டு விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என மேனன் குறிப்பிட்டுள்ளார். தெற்காசியாவில் மிகவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இலங்கையின் பொருளாதாரம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 80,000 முதல் 100,000 வரை போராளிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் 30000 முதல் 50000 வரையிலானவர்கள் பொதுமக்கள் எனவும், 27.693 புலி உறுப்பினர்கள், 23.790 இலங்கை இராணுவத்தினர் எனவும், 1155 பேர் இந்திய அமைதி காக்கும் படையினர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டம் 300,000 அகதிகள் அல்லது இடம்பெயர்ந்தோரை உருவாக்கியது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1.6 மில்லியன் நிலக்கண்ணி வெடிகளை இந்த போர் விட்டு சென்றது.

ஆனால் போர் உயிரிழந்தவர்கள் இலங்கையின் கலப்பு சமூகத்தினராகும், இதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிங்களம் பேரினவாதத்திற்கு சமமான அளவு பொறுப்பு உள்ளதென மேனன் குறிப்பிட்டுள்ளார்.

“கொலைகள், சித்திரவதைகள், தடுத்து வைத்தல் மற்றும் போரில் அனைத்து தரப்பினராலும் அதிகளவில் மனித உரிமை மீறப்பட்டமையின் ஊடாக இலங்கையின் ஜனநாயகம் காணாமல் போனது.

சிவில்-இராணுவ உறவுகள் திரிபுபட்டமை, சிங்களம் சமூகம் இராணுவமயமாக்கப்பட்டமை, தமிழ் மற்றும் சிவில் சமூகத்தின் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டமையின் ஊடாக எந்த திசையில் நம்பிக்கை இல்லாமல் போனது.

யுத்தத்தின் பின்னர் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த வெற்றியின் பின்னர் அதனை நல்லிணக்கத்தை நோக்கியோ சமாதானத்தை நோக்கியோ நகர்த்த முயற்சிக்கவில்லை.

அவர் சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய முனைப்புக் காட்டும் தமிழ்த் தலைவர்களும் இருக்கவில்லை என சிவசங்கர் மேனன் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

மட்டக்களப்பில் புலிகள்..!! அடுத்தது என்ன?? – மீண்டுமோர் அழைப்பு..!

Next Post

முகத்தில் நான்கு புள்ளிகள்… சொல்லும் உண்மைகள்…!

Next Post
முகத்தில் நான்கு புள்ளிகள்… சொல்லும் உண்மைகள்…!

முகத்தில் நான்கு புள்ளிகள்... சொல்லும் உண்மைகள்...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures