Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சூடுபிடிக்கும் செம்மணி விவகாரம்: உண்மைகளை உடைக்க உள்ள சோமரத்ன – சந்திக்க திட்டமிடும் தரப்பு

September 9, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இன அழிப்புக்கு சாட்சியாக அமைந்த கிருசாந்தியின் மரணம் : சிறீதரன் எம்.பி

கிருசாந்தி படுகொலை வழக்கின் மரண தண்டனைக் கைதியாக உள்ள சோமரத்ன ராஜபக்சவை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மீண்டும் சந்திப்பது குறித்து கலந்துரையாடப்படுகிறது.

ஏற்கனவே அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் அவரை சந்திப்பதற்கான தேவைகள் குறித்து ஆராயப்படுவதாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

சோமரத்ன ராஜபக்சவை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினர் பல்வேறு விடயங்களை கேட்டறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

எனினும், குறித்த சாட்சியங்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதா? அல்லது அவரை மீண்டும் சந்திப்பதா? என்பது குறித்து கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கும் செம்மணி விவகாரம்: உண்மைகளை உடைக்க உள்ள சோமரத்ன - சந்திக்க திட்டமிடும் தரப்பு | Missing Persons Office Meeting Somaratne Rajapaksa

இந்த நிலையில், அவரை மீண்டும் சந்திப்பதற்கான எவ்வித இறுதி தீர்வும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் வெளிப்படுத்த உள்ளதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ச மீண்டும் தனது மனைவியின் ஊடாக கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கில் சித்திரவதைக்கூடங்கள்

அக்கடிதத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரத்தில் தனது வகிபாகம், தான் உள்ளடங்கலாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய 5 இராணுவத்தினரும் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டமை.

சூடுபிடிக்கும் செம்மணி விவகாரம்: உண்மைகளை உடைக்க உள்ள சோமரத்ன - சந்திக்க திட்டமிடும் தரப்பு | Missing Persons Office Meeting Somaratne Rajapaksa

அதேபோன்று செம்மணி மனிதப் படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ச வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி 1996 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்பெற்ற செம்மணி மனிதப்படுகொலை, வடக்கில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரை அவற்றை செயற்படுத்திய சகல அதிகாரிகளினதும் பெயர் விபரங்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளக் கூடியவகையில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

பிரபாகரனை கொல்லும் படி கூறினாரா சம்பந்தன்.! மனம் திறந்த சிறீதரன்

Next Post

நெருங்கிய நண்பரை காவல்துறையில் ஒப்படைக்குமாறு நாமலுக்கு வலியுறுத்து!

Next Post
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நெருங்கிய நண்பரை காவல்துறையில் ஒப்படைக்குமாறு நாமலுக்கு வலியுறுத்து!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures