கனடாவில் முன்னறிவித்தலுமின்றி ஒருவரது வீடு நீதிமன்ற அறிவித்தலுக்கமைய இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

கனடாவில் முன்னறிவித்தலுமின்றி ஒருவரது வீடு நீதிமன்ற அறிவித்தலுக்கமைய இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

உரிய அனுமதியின்றி வீட்டை நிர்மானித்தார் என்பதால் எவ்வித முன்னறிவித்தலுமின்றி ஒருவரது வீடு நீதிமன்ற அறிவித்தலுக்கமைய இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அல்பர்ட்டாவில் Carmangay, Alta கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்கையில், ‘நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எனது வீடு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது உடமைகள் அனைத்தும் வீட்டுடன் சேர்த்து அழிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இந்நிலையில், இது குறித்து தெரிவித்த Carmangay மேயர், ‘எந்த இடத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதாக இருப்பினும் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். ஆனால் குறித்த நபர் வாகன திருத்துமிடமொன்றை நிர்மாணிக்க அனுமதி பெற்று, அந்த அனுமதியை கொண்டு வீடு அமைத்துள்ளார்.

இந்நிலையிலேயே அவரது வீடு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இடிக்கப்பட்டது. மேலும், கட்டுமான பணிகளின் போது குறித்த பணிகளை நிறுத்த கட்டளையிட்ட போதிலும் அதனையும் மீறி குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

3,595 total views, 823 views toda

– See more at: http://www.canadamirror.com/canada/75768.html#sthash.6bXstpO6.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *