நடிகை கஸ்தூரி இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இவர் தமிழ்நாட்டு மக்களுக்காக மாத்திரமின்றி ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர்.
சில மாதங்களின் முன்னர் இவர் ஊடகப் போராளி கிருபா பிள்ளையின் அழைப்பில் கனடா வந்திருந்தார். அங்கு பேசிய வேளை நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தால் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பேன் என்றார்.

அத்துடன் இவர் ஈழத்திற்கும் வருகை தந்திருந்தார். ஈழத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய வேளையில் பலரும் கவனித்து ஆச்சரியம் அடைந்தனர்.
இந்திய ஊடகங்களில் பேசுகின்ற வேளைகளிலும் ஈழம் பற்றியும் ஈழப் போராளிகள் பற்றியும் தலைவர் பற்றியும் இவர் மிகவும் துணிவாகவும் ஈர்ப்பாகவும் பேசுவார்.

இந்த நிலையில் பாஜகாவில் இணைந்துள்ள நடிகை கஸ்தூரி இந்திய பிரதமர் மோடியிடத்தில் ஈழத் தமிழ் மக்களின் உரிமை குறித்து விடுதலை குறித்து பேசுவார் என்று ஈழத் தமிழர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.