சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், ‘மிஸ்டர் ஜு கீப்பர்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் உயர்ந்த நடிகர் புகழ் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றை பாடி பின்னாடி பாடகராகவும் அறிமுகமாகிறார்.
இயக்குநர் எம் சாஜோ சுந்தர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் புகழ் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் எம். ஸ்ரீ வக்சன் மற்றும் எம்.கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு சுபாஷ் முனிரத்னம் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்காக பிரபல பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய பாடலை சுபாஷ் முனிரத்னம் இசையில் நடிகர் புகழ்- பின்னணி பாடகி விருஷா பாலு- பின்னணி பாடகர் ஜெகதீஷ் குமார் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலைப் பாடியிருப்பதன் மூலம் நடிகர் புகழ் பாடகராகவும் அறிமுகமாகிறார். துள்ளலிசை பாணியிலான இந்தப் பாடல் சிறப்பாக வந்துள்ளதாக படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.