அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும், தொழிலில் நுழைபவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்றும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தென் மாகாண கல்வித் துறை பிரதிநிதிகளுடன் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாட நேற்று (19) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளார்.
“அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும், மேலும் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும் பட்டதாரிகள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும்,” என்று அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
புதிய சீர்திருத்தங்கள்
பாடசாலைகளில் நேரடியாகச் சேரும் பல பட்டதாரிகள் ஆசிரியர் பயிற்சி இல்லாத நிலையில், ஆசிரியர் பயிற்சி பெறுபவர்கள் பெரும்பாலும் பட்டம் பெறாததால், தற்போதைய முறை குறைபாடுடையதாக இருப்பதாக பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயல்படுத்த ஒரு கல்வி சபையை நிறுவ முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.