Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சீட் எட்ஜ் திரில்லராக தயாராகி இருக்கும் உதயாவின் ‘அக்யூஸ்ட்’

July 21, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சீட் எட்ஜ் திரில்லராக தயாராகி இருக்கும் உதயாவின் ‘அக்யூஸ்ட்’

நடிகர்கள் உதயா , அஜ்மல், யோகி பாபு ஆகியோர் கதையை வழிநடத்தி செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ,கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி, முதன் முதலாக தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் , சச்சின் சினிமாஸ்,  ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரித்திருக்கிறது .

இத்திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” படத்தைப் பற்றி நான் எதையும் மிகையாக சொல்லவில்லை. இந்தப் படம் அனைவரையும் வசீகரிக்கும். இந்த படத்தைப் பற்றிய ஏதேனும் எதிர்பார்ப்புடன் பட மாளிகைக்கு வந்தால் அவர்களின் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே இருக்கும்.  திரைக்கதையில் யாரும் யூகிக்காத திருப்பங்கள் இருக்கும். படம் தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும் படியான சீட் எட்ஜ் திரில்லராக இருக்கும். ” என்றார்.

Previous Post

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீ மூட்டிய விசமிகள் | சிலர் வைத்தியாலையில் அனுமதி

Next Post

ஆசிரியராக விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Next Post
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு !

ஆசிரியராக விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures