நிகழ்நிலை சூதாட்ட மோசடியில் ஈடுபட்ட இருபத்தொரு இந்திய பிரஜைகள் இன்று (18) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் குழு சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து, விசா காலாவதியான பிறகும் கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் கீழ் உள்ள இடர் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் தரவுகளை பகுப்பாய்வு செய்து இதைக் கண்டறிந்த பின்னர் சந்தேகத்துக்குரிய குழு கைது செய்யப்பட்டுள்ளது.
நாடுகடத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளும் 22-36 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன்படி, குறித்த குழுவினரை இந்தியாவிற்கு உடனடியாக நாடு கடத்துவதற்காக வெலிசறை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.