Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார் 

February 17, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார் 

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். 

அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர். 

இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றமை இவரை பெருமைப்படுத்தும் விடயமாகும். 

அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும். 

Previous Post

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு ; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மகிழ்ச்சி – ரவிகரன் எம்.பி

Next Post

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவதில்லை : அமைச்சர் சந்திரசேகர்

Next Post
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அதில் கைவைக்கோம்! – அமைச்சர் சந்திரசேகர்

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவதில்லை : அமைச்சர் சந்திரசேகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures