Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் – ஜனாதிபதி

January 31, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் – ஜனாதிபதி

தெற்கில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துவோம். நாட்டின் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப எமது அரசாங்கம் முழு மூச்சாக செயற்படுகிறது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். வல்வெட்டித்துறையில் இன்று (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

வடக்கு மக்கள் கடந்த இரண்டு பிரதான தேர்தல்களின் போதும் தேசிய மக்கள் சக்திக்கு அளித்த வாக்குகள் வெறுமனே ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான புள்ளடி மாத்திரம் அல்ல. மாறாக அவை இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு வழங்கிய வாக்குகளாகும். 

இலங்கையில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு தெற்கு, மேற்கு, மலையகம் என பேதமின்றி அனைத்து மக்களின் ஆதரவுடன் அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல தசாப்தங்களாக ஆட்சியாளர்கள் மக்களை வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என பிளவுபடுத்தியே ஆட்சி செய்தார்கள். ஆனால், நாம் மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு பதிலாக அவர்களை ஒன்றிணைக்கும் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம்.

இதற்கு முன்னர் நாட்டில் மேல் மட்டத்தில் இருந்த ஒரு சில குடும்பங்களிடமே அதிகாரம் இருந்தது. ஆனால், இந்த நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலின்போது தீர்க்கமான முடிவை எடுத்திருந்தனர். உயர் மட்டத்தில் இருந்து சாதாரண மக்களிடத்தில் அதிகாரத்தை கைம்மாற்றினார்கள். எனவே, இந்த மக்களுடனேயே எமக்கு பிணைப்பு உள்ளது. கட்டம் கட்டமாக இந்த நாட்டை நாம் மீட்டெடுப்போம். 

அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளோம். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்கியுள்ளோம். 

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த வருடத்துக்குள் அதற்கான நடவடிக்கை எடுப்போம்.

வடக்கின் காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் புதிய கைத்தொழிற்பேட்டைகளை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு இங்கு முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம். தொழில்வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இங்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.

அரச திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பொலிஸ் திணைக்களங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. 2 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளோம். தமிழ் பேசும் இளைஞர்களும் இதில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம். இந்த பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

அதேபோன்று காணி பிரச்சினை உள்ளது. மக்களின் காணிகள் மக்களிடத்திலேயே வழங்கப்பட வேண்டும். எனவே, காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்போம். கிராமப்புறங்களில் உள்ள வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்குவோம். குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுப்போம்.

எமது மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். மீனவர் பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடினோம். இலங்கை கடற்படைக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளோம். கட்டம் கட்டமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். 

எனவே, எமக்கு சிறிது காலம் தாருங்கள். நிச்சயம் தீர்வு காண்போம். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்போம். வடக்கில் தெங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

எனவே, நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தார்கள். நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் தோற்றம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாத்தை கையில் எடுக்கும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம்.

இனிமேலும் முரண்பட்டுக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு எமது அரசாங்கம் முழு மூச்சாக செயற்படுகிறது.

மக்களிடத்தில் இனவாதம் மதவாதம் இல்லை. ஆனால் அரசியல்வாதிகளிடம் இந்த பண்புகள் உள்ளன. தற்போது தெற்கில் இனவாத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

இந்த நாட்டை புதிய யுகத்தை நோக்கி அழைத்துச் செல்வோம். இந்த மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வோம். தண்டனை பெற்றுக் கொடுப்போம். 

கடந்த தேர்தலின்போது பிரிந்து செயற்பட்டவர்கள் மீண்டும் ஒன்றிணைய முயற்சிக்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு ஒன்றாக கூடியுள்ளனர். ஒருபக்கம் மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர். மற்றைய பக்கம் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை ஏமாற்றியவர். திருடர்கள் ஒன்றிணைந்தாலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது. நாம் முன்னெடுத்துள்ள விசாரணைகளை அவர்களால் நிறுத்த முடியாது. மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இணைந்தாலும் மக்கள் எம்முடன் இருக்கிறார்கள். நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றார்.

Previous Post

நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு மாவையின் நினைவுகள் ஆசீர்வாதமாக அமையட்டும் – பிரதமர் 

Next Post

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

சமுத்திரக்கனி நடிக்கும் 'ராமம் ராகவம்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures