Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

January 31, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறந்த குணசித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் சமுத்திரக்கனி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ராமம் ராகவம் ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ ராமம் ராகவம் ‘ எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி , தன்ராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் , சத்யா,  மோக்ஷா சென் குப்தா , பிரமோதினி , சீனிவாஸ் ரெட்டி , பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். துர்கா பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருள் சில்லுவேரு இசையமைத்திருக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை சிலேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிருத்வி பொலவரபு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரபாகர் ஆரிபாகா வழங்குகிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இதனிடையே சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘திரு. மாணிக்கம் ‘ எனும் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்றதால், அவருடைய நடிப்பில் வெளியாகும் ‘ராமம் ராகவம் ‘ படத்திற்கும் ரசிகர்களிடத்திலும் , திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் – ஜனாதிபதி

Next Post

வடக்கில் அதிகரிக்கவுள்ள தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

Next Post
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

வடக்கில் அதிகரிக்கவுள்ள தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

June 22, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் – உதய கம்மன்பில 

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures