Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குறைக்கப்பட்டது மின்சார கட்டணம் : வெளியானது அறிவிப்பு

January 18, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாளை முதல் மின் கட்டண குறைப்பு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை  இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இன்று (17) வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதத்தினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் (Jayanath Herath) தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளுக்கான மின் கட்டண குறைப்பு 

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதுடன் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். 

குறைக்கப்பட்டது மின்சார கட்டணம் : வெளியானது அறிவிப்பு | Electricity Tariff Reduction New Price Today

அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0 முதல் 30க்கு இடைப்பட்ட அலகு மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் 29 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 31 முதல் 60 வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் 28 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 91 முதல் 180 அலகு வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 18 வீத கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 19 வீத கட்டணக் குறைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தெரு விளக்குகளுக்கான கட்டணம்

இதேவேளை பொதுத்துறைக்கு 11வீதம், ஹோட்டல் துறைக்கு 31 வீதம் மற்றும் தொழில்துறை துறைக்கு 30 வீத கட்டணக் குறைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்டது மின்சார கட்டணம் : வெளியானது அறிவிப்பு | Electricity Tariff Reduction New Price Today

அத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 21வீத மின்சாரக் குறைப்பும் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அத்துடன், தெரு விளக்குகளுக்கு 11 வீத கட்டணக் குறைப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பவன் கல்யாண் நடிக்கும் ‘ஹர ஹர வீரமல்லு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

Next Post

மாத்தளையில் தனியார் நிறுவனம் ஒன்றில் தீ விபத்து

Next Post
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டுக்கு விசமிகளால் தீ வைப்பு

மாத்தளையில் தனியார் நிறுவனம் ஒன்றில் தீ விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures