Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய் அண்டனி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘ககன மார்கன்’

October 17, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
விஜய் அண்டனி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘ககன மார்கன்’

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ககன மார்கன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தொகுப்பாளராக பணியாற்றி வரும் லியோ ஜோன் பால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ககன மார்கன்’ திரைப்படத்தில் விஜய் அண்டனி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

எஸ். யுவா ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேஷன் சார்பில் விஜய் அண்டனி மற்றும் மீரா விஜய் அண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ‘ககன மார்கன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

ககன மார்க்கம் என்றால் நிலத்திலிருந்து ஆகாய வெளியில் பறந்து செல்பவன் என பொருள் கொள்ளலாம். இது சித்தர்கள் பாவிக்கும் மார்க்கம் என்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்  ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் போது வித்தியாசமான முகத் தோற்றத்துடன் விஜய் அண்டனி பங்கு பற்றினார்.

அது இந்தப் படத்திற்கான தோற்றம் என்பது தற்போது தெரிய வந்திருப்பதாலும்.. படத்தின் டைட்டில் ‘ககன மார்கன்’ என வித்தியாசமாக இருப்பதாலும்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

இதனிடையே விஜய் அண்டனி நடிப்பில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘ஹிட்லர்’ ஆகிய படங்கள் பரிய வெற்றியைப் பெறாததால், வணிக ரீதியிலான வெற்றியை வழங்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார் என்பதும், அவர் நடிப்பில் தயாரான  சில படங்கள் ( அக்னி சிறகுகள், வள்ளி மயில் …) போதுமான வணிகம் இல்லாததால் உரிய தருணத்தில் பட மாளிகையில் வெளியாகவில்லை என்பதும், அதன் வெளியீட்டிற்காக காத்திருக்காமல், தன் சந்தை மதிப்பை தக்கவைத்துக் கொள்ள சொந்த பட நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்து, வெளியிடதிட்டமிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் | மிதிலைச்செல்வி

Next Post

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Next Post
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures