Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் உத்தியோகத்தரை நிர்வாணமாக்கித் தாக்கியவர்கள் கைது!

May 27, 2024
in News, Sri Lanka News
0
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் | பின்னணியில் அரசியல்வாதியின் ஆதரவாளர்கள்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நிர்வாணமாக்கித் தாக்கிய சம்பவம் தொடர்பில்  பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 59 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இவர் கடந்த 24 ஆம் திகதி அன்று தனது கடமைகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் தேவையான மரக்கறிகளை வாக்குவதற்காக நுவரெலியா, பொரலந்த பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, அங்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரைத் தாக்கி கை,கால்களைக் கட்டி லொறி ஒன்றின் மூலம் வீடொன்றுக்கு அழைத்துச் சென்று இவரை நிர்வாணமாக்கி பலமாகத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பிரதேசவாசிகளினால் கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்றி அவரை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்கள் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்த 26,600 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் பிரிவிலிருந்து நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குப் பணி மாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது மனைவியைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இவரது மனைவி இவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதுடன் இது தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடாக ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post

ஜனாதிபதியின் நிகழ்வை தேர்தல் பரப்புரை நிகழ்வாக நடத்த முயற்சி | எம்.ஏ சுமந்திரன்

Next Post

நவநாஜிய பாணியிலே தமிழர்கள்மீது அரச ஒடுக்குமுறைகள் | பேராசிரியர் பத்மநாதன்

Next Post
நவநாஜிய பாணியிலே தமிழர்கள்மீது அரச ஒடுக்குமுறைகள் | பேராசிரியர் பத்மநாதன்

நவநாஜிய பாணியிலே தமிழர்கள்மீது அரச ஒடுக்குமுறைகள் | பேராசிரியர் பத்மநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures