Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் மனிதநேய கூட்டணியை ஸ்தாபிப்போம் – பாட்டலி சம்பிக்க ரணவக்க

February 28, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டாபய கூறுவது முற்றிலும் பொய் | அம்பலப்படுத்திய சம்பிக்க

அரசியலில் பல ஆண்டுகளாக  பகைத்துக் கொண்டிருந்த ராஜபக்ஷர்களும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணையும் போது கொள்கை ரீதியில் வேறுப்பாடுகள் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் ஒன்றிணைய கூடாது. சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து மனிதநேய கூட்டணியை ஸ்தாபிப்போம் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்களுக்கும்,ஐக்கிய குடியரசு முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (27) மாலை கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமாயின்  அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

மனிதநேயமிக்க அரசியல் கூட்டணி ஒன்றை ஸ்தாபிப்பதற்குச் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.ஐக்கிய தேசியக் கட்சி,சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.

சகல தரப்பினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஸ்தாபிப்பது பிரதான இலக்காகும்.அரசியலில் கீரியும்,பாம்பும்   போல்  பல ஆண்டுகாலமாக பகைத்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்,மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைந்துள்ளார்கள். இவர்களால் ஒன்றிணைய முடியுமாயின் ஏன் கொள்கை ரீதியில் மாத்திரம் வேறுபாடு கொண்டுள்ள தரப்பினரால் ஒன்றுபட முடியாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து ஏனைய அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Previous Post

அதிகரிக்கும் வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

Next Post

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால் வெளிநாடு சென்ற குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி

Next Post
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால் வெளிநாடு சென்ற குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

June 29, 2026
கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

June 29, 2026
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures