Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கனேடிய தமிழ் காங்கிரஸ் மகிந்தவுடன் சந்திப்பு – நம்பமுடியாத துரோகம் கனடா தமிழ் சமூகம்

December 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கனேடிய தமிழ் காங்கிரஸ் மகிந்தவுடன் சந்திப்பு – நம்பமுடியாத துரோகம் கனடா தமிழ் சமூகம்

கனேடிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து கனடா தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் ஏமாற்றமும் சீற்றமும் வெளியிட்டுள்ளனர்

இது குறித்து தமிழ்கார்டியன் தெரிவித்துள்ளதாவது.

பல வருடங்களாக கனேடிய தமிழ் காங்கிரஸ் பாரியஅநீதிகளிற்காக இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை அவசியம் என வேண்டுகோள் விடுத்து வந்திருந்தது.

கடந்த வாரம் அவர்கள் தமிழர்களிற்கு எதிரான அநீதிகளிற்கு முக்கியகாரணமான நபரை சந்தித்து புகைப்படம்எடுத்துக்கொண்டனர்.

இது கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தினருக்கு கடும் அதிருப்தியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் பலருக்கு சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார் அபிமன்யு சிங்கம் இவர் கனேடிய தமிழ் காங்கிரசினை ஸ்தாபித்தவர்களில் ஒருவர் அதன் முன்னாள் இயக்குநர் 

கடந்த காலங்களில் சிடிசி ஏனைய பல தமிழ் புலம்பெயர் அமைப்புகளைபோல 2009 இல் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களிற்கு நீதி பொறுப்புக்கூறலிற்காக குரல்கொடுத்து வந்துள்ளது.

ஒட்டாவா ரொன்டோ வோசிங்டன் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றில்அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர்.

எனினும் கனேடிய தமிழ் காங்கிரசின் கடந்த வார சந்திப்பும் பல கனேடிய தமிழர்களிற்கு அதன் ஸ்தாபக தலைவர் அபிமன்யு சிங்கத்திற்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கொழும்பில் கனேடி தமிழ் காங்கிரசின் சிரேஸ்ட தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர் – சிடிசி முன்னர் நீதிகோரிய அநீதிகளிற்கான முக்கிய காரணகர்த்தா மகிந்த ராஜபக்ச.

அவரது ஆட்சியின் கீழேயே படையினர் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகள் மீது எறிகணை வீச்சினை மேற்கொண்டனர் வெள்ளை கொடியுடன் சரணடைய வந்த தமிழர்களை சுட்டுக்கொன்றனர்.

கடந்த வாரம் ராஜபக்ச தனது அலுவலகத்;தில் தனது பணியாளர்களுடன் பெரிய தேசிய கொடியின் கீழ் அமர்ந்திருந்தார்.

அந்த கட்டிடம் முழுவதும் முன்னாள் ஜனாதிபதியின் படங்கள் காணப்பட்டன- சிடிசி உறுப்பினர்கள் சுமூகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள் கைகுலுக்கினார்கள் ஒன்றாக படம் எடுத்துக்கொண்டார்கள்.

அந்த படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின -ஒரு சில நிமிடங்களில் அவை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன- கனேடிய தமிழர்களின் கடும் கண்டனத்திற்குள்ளாகின.

உலக தமிழர் பேரவையும் கனேடிய தமிழ் காங்கிரசும் சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளமை கண்டிக்கப்படவேண்டிய விடயம் என்கின்றார் கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி.

ராஜபக்சாக்களின் குற்றங்கள் நன்கு பதியப்பட்டுள்ளன 2023 ஜனவரி 10 ம் திகதி கனடா அரசாங்கம் மனித உரிமைகளை திட்டமிட்ட முறையில் மீறியமைக்காக மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்சாவிற்கு எதிராக தடைகளைவிதித்தது. என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை பேரவையிலும் ஏனைய அமைப்புகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பரப்புரையின் பின்னரேஇது சாத்தியமானது யுத்த குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் என்பவற்றிற்கு நீதிகோரி பரப்புரை இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும்   கனடா பிரஜைகள் உட்பட  சிடிசியின் உறுப்பினர்கள்மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர் 

உலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரிலேயே இந்தசந்திப்பு இடம்பெற்றதாக ராஜபக்ச அலுவலகம் தமிழ் கார்டியனிற்கு உறுதி செய்துள்ளது.உலக தமிழர் பேரவை என்பது சிடிசி நோர்வேஜியன் தமிழ் போரம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு

பாதிக்கப்பட்டவர்கள் சிவில் சமூகத்தினர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை மதிப்பிடலில்  ஏற்பட்ட பெரும் தோல்வி என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடுகள் இந்த அமைப்புகளின் நம்பிக்கையை அவர்கள் தாங்கள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள்-தாயகத்;தில் உள்ள தமிழர்களின் சார்பில் பரப்புரை செய்வதற்கானவர்கள் என தெரிவிக்கப்படுவதை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆழமான காயம் -ஏமாற்றம் –

எங்கள் மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் கட்டியெழுப்பப்பட்டஅமைப்பு எங்கள் முதுகில் குத்திவிட்டது என்பது குறித்து நான் ஏமாற்றமும் விரக்தியும் காயமும் அடைந்துள்ளேன் என  தமிழ் கனடா சமூகத்தின் தீவிர செயற்பாட்டாளர் நீதன் சான் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றவாளிகள் தமி;ழ் மக்களின் இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து செயற்படுவதற்காக நாங்கள் ஒரு சமூகமாகஇணைந்துஇவர்களை கண்டிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தினை கனடாவின் குயின்ஸ் பல்கலைகழகத்தின் கனடா தமிழரான பேராசிரியர் அமர்நாத் அமரசிங்கம் உட்பட பலரும் முன்வைத்துள்ளனர்.

இது குறித்து என்னுடன் பேசிய அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகளில் பல வருடங்களாக மகிந்தவின் யுத்த குற்றங்கள் குறித்து உரையாற்றிய அதனை இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என பரப்புரை செய்த கனேடிய தமிழ் காங்கிரசும் உலக தமிழர் பேரவையும் தற்போது அவரின் பின்னால் சென்றுள்ளமை குறித்து மிகவேகமாக தெளிவான விளக்கங்களை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கு அபிவிருத்திகள் என வரும்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தவிர்க்க முடியாதது என நான் கருதுகின்றேன் ஆனால் சிறிதளவேனும் வருந்தாத பூஜ்ஜிய பொறுப்புக்கூறலை வெளிப்படுத்திய  புலம்பெயர்ந்த தமிழர்களின் பூதாகரமாக சித்தரிக்கும்  அரச தலைவர்களுடன்  இணைந்து செயற்படுவது தீங்கு விளைவிக்கும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய தமிழ் காங்கிரஸினை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர் என்ற அடிப்படையில் அந்த அமைப்பு அதன் ஆணை மற்றும் தொலைநோக்கு பார்வையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச்சென்றுள்ளது என்பது கவலையளிக்கின்றது என சட்டத்தரணிஹரிணி சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Previous Post

போதைப்பொருளில் சம்பாதித்த பணத்தில் 8 வாகனங்கள்

Next Post

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை | ஜனவரி 2ஆம் திகதி மரண விசாரணை கட்டளை

Next Post
யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை | ஜனவரி 2ஆம் திகதி மரண விசாரணை கட்டளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures