Easy 24 News

ஒபாமாவை சந்திக்கச் சென்ற டிரம்ப்பிற்கு கிடைத்த அதிர்ச்சி மரியாதை!

ஒபாமாவை சந்திக்கச் சென்ற டிரம்ப்பிற்கு கிடைத்த அதிர்ச்சி மரியாதை!

அதிபர் ஒபாமாவை சந்திக்கச் சென்ற டொனால்ட் டிரம்ப்பின் விமானத்துக்கு நியூயார்க் விமான நிலையத்தில் கிடைத்த ‘வாட்டர் கேனான் சல்யூட்’ மரியாதை தொடர்பான வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவை நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசினார்.

உதவியாளர்கள் யாருமின்றி சுமார் 90 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது நாட்டின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஒபாமாவும், டிரம்ப்பும் விவாதித்ததாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பு மிக பிரமாதமாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள அதிபர் ஒபாமா, உங்களது வெற்றி அமெரிக்காவின் வெற்றி என்பதால் நீங்கள் வெற்றிபெற எங்களால் (ஜனநாயக கட்சி) இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம் என டிரம்ப்புக்கு வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தார்.

முன்னதாக, நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டு சென்ற டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான ’போயிங் 757’ விமானத்துக்கு ‘வாட்டர் கேனான் சல்யூட்’ எனப்படும் தண்ணீரை பீய்ச்சியடித்து வீரவணக்கம் செலுத்தும் காட்சி யூடியூபில் வெளியாகியுள்ளது.

விமான நிலைய ஓடுதளத்தில் இரு தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் இந்த காட்சி ஒருபுறம் வரவேற்பையும், மறுபுறம் விமர்சனத்தையும் சம்பாதித்துள்ளது.

சாதாரணமாக, போர்களில் சாகசம் செய்த மாவீரர்கள், வெளிநாட்டு தலைவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இதுபோன்ற இராஜ மரியாதை அளிக்கப்படும் நிலையில் அமெரிக்காவின் அதிபராக இன்னும் பதிவியேற்காத டிரம்ப்பின் விமானத்துக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வாட்டர் சல்யூட் தொடர்பாக கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *