Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இங்கிலாந்தை 156 ஓட்டங்களுக்கு சுருட்டியது இலங்கை

October 27, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இங்கிலாந்தை 156 ஓட்டங்களுக்கு சுருட்டியது இலங்கை

பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் 25ஆவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்தை 156 ஓட்டங்களுக்கு இலங்கை கட்டுப்படுத்தியது.

அணிக்கு மீளழைக்கப்பட்ட ஏஞ்சலோ மெத்யூஸ் உட்பட ஏனைய பந்துவீச்சாளர்கள் களத்தடுப்பு வியூகங்களுக்கு ஏற்ப பந்துவீசியதன் பலனாகவே இங்கிலாந்தை இலங்கையினால் கட்டுப்படுத்த முடிந்தது.

இங்கிலாந்து 33.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

ஜொனி பெயர்ஸ்டோவ், டாவிட் மலான் ஆகிய இருவரும் இலங்கையின் ஆரம்ப வேகப்பந்துவீச்சாளர்களான டில்ஷான் மதுஷன்க, கசுன் ராஜித்த ஆகிய இருவரையும் இலகுவாக எதிர்கொண்டு வேகமாக ஓட்டங்களைக் குவித்து ஆரம்ப விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஆனால், 7ஆவது ஓவரில் பந்து வீச அழைக்கப்பட்ட அனுபசாலியான ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 3ஆவது பந்தில் டாவிட் மாலனை ஆட்டமிழக்கச் செய்து போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

டாவிட் மலான் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் இங்கிலாந்தின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

ஜோ ரூட் 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மெத்யூஸ் – மெண்டிஸ் ஜோடியினரால் ரன் அவுட் ஆக்கப்பட்டார்

அணித் தலைவர் ஜொஸ் பட்லர் 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது லஹிரு குமாரவினால் ஆட்டம் இழக்கச்செய்யப்பட்டார்.

மறு பக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்ளைப் பெற்ற ஜொனி பெயாஸ்டோவை கசுன் ராஜித்த வெளியேற்றினார்.

அவரைத் தொடர்ந்து லஹிரு குமாரவின் பந்துவீச்சில் லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அணியை வீழச்சியிலிருந்து மீட்க முயற்சித்தனர்.

அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மொயீன் அலியின் விக்கெட்டை மெத்யூஸ் கைப்பற்றி ஆட்டத்தில் இரண்டாவது திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

மொயின் அலி 15 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து களம் புகுந்த கிறிஸ் வோக்ஸ் கொடுத்த தாழ்வான பிடியை வலப்புறமாகத் தாவி சமீர சமரவிக்ரம பிடித்தார்.

ஆனால், அந்தப் பிடி நேர்த்தியாக எடுக்கப்படவில்லை என்ற சந்தேகத்தில் 3ஆவது மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

நீண்டநேரம் சலன அசைவுகளைப் பார்வையிட்ட 3ஆவது மத்தியஸ்தர், கிறிஸ் வோக்ஸ் ஆட்டம் இழந்ததாக அறிவிக்க வோக்ஸ் நம்பமுடியாதவராக அதிருப்தியுடன் களம் விட்டகன்றார்.

இதேவேளை பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சாளர்களை சிதறடிக்கும் வகையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. அவர் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

தொடரந்து ஆதில் ராஷித் (2) ரன் அவுட் ஆனதுடன் மார்க் வூட் 5 ஓட்டங்களுடன் தீக்ஷனவினால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டார்.

டேவிட் வில்லி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

157 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கை சற்று நேரத்திற்கு முன்னர் 8 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Previous Post

பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்த சந்தேகநபர் கைது

Next Post

இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

Next Post
இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures