ஒரே இலக்கத்தைக் கொண்ட 5000 ரூபா பெறுமதியான 5 போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கதிர்காமம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தெபரவெவ கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த வருடம் இரண்டு போலி 5, 000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் அச்சிடும் இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டதாகவும் பாடசாலை ஒன்றில் ஆய்வக அதிகாரியாக கடமையாற்றி வந்ததாகவும், இந்த சம்பவத்தின் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.










