Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் சீனா தற்காலிக இணக்கப்பாடு | அந்நாட்டு வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின் சுட்டிக்காட்டு

October 12, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் சீனா தற்காலிக இணக்கப்பாடு | அந்நாட்டு வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின் சுட்டிக்காட்டு

உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் என்ற ரீதியில் சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது (எக்ஸிம் வங்கி) கடந்த செப்டெம்பர்மாத இறுதியில் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் தற்காலிக இணக்கப்பாட்டை எட்டியதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை தவணை அடிப்படையில் முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்கு உள்ளக மற்றும் வெளியகக் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம் இலங்கை அதன் கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளது.

இருப்பினும் இச்செயற்திட்டத்தின் பிரகாரம் இலங்கை அதன் நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ள விதம் குறித்து ஆராய்வதற்காகக் கடந்த மாதம் நாட்டுக்கு வருகைதந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, இலங்கையின் வெளியகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் இன்னமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடையப்படாததன் விளைவாக இலங்கைக்கான இரண்டாம் தவணைக் கடன்தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இது இவ்வாறிருக்க வெளியகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பொறுத்தமட்டில் இந்தியா, ஜப்பான் மற்றும் ‘பாரிஸ் கிளப்’ உறுப்பு நாடுகள் உள்ளிட்ட இலங்கையின் கடன்வழங்குனர் நாடுகள் கூட்டிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்றி வருவதாகவும், அவை இலங்கைக்கான பிரதான கடன்வழங்குனர் நாடான சீனாவைத் தவிர்த்து கடன்மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவது குறித்து ஆலோசித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் வெளியகக் கடன்மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற மாதாந்த ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அந்நாட்டின் வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தற்போது மிகமுக்கியமான கட்டத்தில் இருக்கின்றது. இச்செயன்முறைக்கு சீனா எத்தகைய உதவிகளை வழங்கியிருக்கின்றது? இருதரப்பு கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் ஏதேனும் முன்னேற்றங்கள் எட்டப்பட்டிருக்கின்றதா?’ என்று வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், ‘இலங்கையின் நட்புநாடு மற்றும் அயல்நாடு என்ற ரீதியில் தற்போது இலங்கை முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை சீனா உன்னிப்பாக அவதானித்துவருகின்றது. அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றோம்.

குறிப்பாக சீனா தொடர்புபட்டிருக்கும் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டிலிருந்து சீனாவின் சம்பந்தப்பட்ட நிதியியல் கட்டமைப்புக்கள் இலங்கையுடன் மிகநெருக்கமான தொடர்பைப்பேணி செயற்பட்டுவருகின்றன’ என்று தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்பு தொடர்பில் செயற்திறன்மிக்க இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகவும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் வகையில் உரியகாலத்தில் ‘நிதியியல் ஆதரவு ஆவணத்தை’ வழங்கியதாகவும் சீன வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின் சுட்டிக்காட்டினார்.

‘அனைத்து கடன்வழங்குனர்கள் கூட்டத்திலும் சீனாவின் நிதியியல் கட்டமைப்புக்கள் கண்காணிப்பாளராகப் பங்கேற்றன. அத்தோடு கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் முன்னேற்றத்தைப் பகிரக்கூடியவகையிலான நட்பு ரீதியான தொடர்பாடலை சீன நிதியியல் கட்டமைப்புக்கள் ஏனைய கடன்வழங்குனர்களுடன் பேணின’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த செப்டெம்பர்மாத இறுதியில் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் என்ற ரீதியில் சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் தற்காலிக இணக்கப்பாட்டை எட்டியதாக சுட்டிக்காட்டிய வாங் வென்பின், இலங்கையின் கடன்நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் ஏனைய கடன்வழங்குனர்கள் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

Previous Post

இஸ்ரேல் யுத்தம் தொடர்பில் மகிந்தவின் நிலைப்பாடு

Next Post

இஸ்ரேலில் அவசரகால அரசாங்க ம் |யுத்தகால அமைச்சரவை

Next Post
இஸ்ரேலில் அவசரகால அரசாங்க ம் |யுத்தகால அமைச்சரவை

இஸ்ரேலில் அவசரகால அரசாங்க ம் |யுத்தகால அமைச்சரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures