Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

திரை விமர்சனம் – அங்காரகன்

September 9, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
திரை விமர்சனம் – அங்காரகன்

அங்காரகன் – விமர்சனம்

தயாரிப்பு : ஜூலியன் & ஜெரோமோ இன்டர்நேஷனல்

நடிகர்கள் : சத்யராஜ், ஸ்ரீபதி, நியா, ‘அங்காடித்தெரு’ மகேஷ், அப்புகுட்டி, கே. சி. பிரபாத், ரெய்னா காரத் மற்றும் பலர்

இயக்கம் : மோகன் டச்சு 

மதிப்பீடு : 2/5 

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் மீண்டும் வில்லனாக நடித்திருக்கிறார் என பட குழு தெரிவித்ததால் இப்படத்தை காண ரசிகர்கள் பட மாளிகைக்கு சென்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியானதா? இல்லையா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

காட்டுப்பகுதியில் தனிமையில் இருக்கும் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் அடுத்தடுத்து சில இளம் பெண்கள் மாயமாகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த அப்பகுதி காவல்துறை உயரதிகாரியான சத்யராஜ் வருகிறார். அவரின் விசாரணை தொடங்குகிறது. விடுதியில் தங்கி இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கான கதையை விவரமாக சொல்கிறார்கள். இதில் உண்மை என்ன? தவறு எங்கே நடந்திருக்கிறது? குற்றவாளி யார்? என்பதனை சத்யராஜ் கண்டுபிடிக்கிறாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

காதல் கதையா  இருக்கிறது. கள்ளக்காதலா.. இருக்கிறது. பேய் கதையா.. இருக்கிறது. பீரியாடிக் கதையா.. இருக்கிறது. இப்படி ஒரு கதையை சொல்லாமல் இரண்டு மூன்று கதைகளை ஒரே கதையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மோகன் டச்சு. இதனால் பார்வையாளர்களுக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகைகள் அனைவரும் இளமையுடன் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சின்ன ஆறுதல்.

அங்காரகன் என்றவுடன் செவ்வாய் பகவான் என தற்போதைய ஆன்மீக அன்பர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் படத்தில் அங்காரகன் என்றால் ஆங்கிலேயரை எதிர்த்த மலைவாழ் மக்களில் ஒருவன் என இயக்குநர் குறிப்பிடுகிறார்.‌ இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் எதிர்பாராத திருப்பம் ஒன்றை இயக்குநர் கையாண்டிருக்கிறார். அது சிலருக்கு பிடித்திருக்கிறது.

கதையின் நாயகனாக வரும் ஸ்ரீபதி அந்த கால மைக் மோகனையும் வேறொரு நடிகரையும் நினைவுபடுத்துகிறார். அவரின் திரைத்தோன்றல் பரவாயில்லை ரகம். நடிப்பில் பயிற்சியைப் பெற்று நடித்திருக்கலாம். இந்த படத்தில் நடிக்க சத்யராஜ் சம்பளத்தை தவிர வேறு ஏதோ சில காரணங்களுக்காக மட்டுமே ஒப்புக் கொண்டிருக்கிறார் என உறுதியாக சொல்லலாம். அவருடைய வழக்கமான நடிப்பு இதிலும் இருக்கிறது. ஆனால் அவருடைய நக்கல் நையாண்டி சில இடங்களில் மட்டுமே எடுபடுகிறது.

இன்வெஸ்டிகேட் திரில்லராகவும் இல்லாமல் விறுவிறுப்பான ஹாரர் திரில்லராகவும் இல்லாமல்  பீரியாடிக் எக்சன் திரில்லராகவும் இல்லாமல்  எல்லாம் கலந்து கட்டி திரைக்கதையாக உருவாகி இருப்பதால், படத்தை ரசிப்பதை விட, குழப்பிக் கொள்வது தான் அதிகம்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நியா அழகு பதுமை.

அங்காரகன் – அதீத கவர்ச்சி 

Previous Post

உயர்தர பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த மாணவன் உயிர்மாய்ப்பு

Next Post

ஊடகவியலாளர்களை பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார் | சாணக்கியன் குற்றச்சாட்டு

Next Post
காபுலில் போல இலங்கையிலும் மக்கள் நாட்டை ஓடும் நிலை உருவாகும்:  சாணக்கியன்

ஊடகவியலாளர்களை பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார் | சாணக்கியன் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026
சொந்த மண்ணில் சரித்திரம் படைத்த தாய் : 2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் போர்ட்டோ ரிகோவின் ஜெனிபர் பாரெட்டோ!

சொந்த மண்ணில் சரித்திரம் படைத்த தாய் : 2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் போர்ட்டோ ரிகோவின் ஜெனிபர் பாரெட்டோ!

November 26, 2026
உலக சதுரங்க அரியணையில் இந்தியாவின் ஆதிக்கம்! பிரக்ஞானந்தா முதலிடம்

உலக சதுரங்க அரியணையில் இந்தியாவின் ஆதிக்கம்! பிரக்ஞானந்தா முதலிடம்

November 26, 2026
எங்கள் சூரியத் தேவனுக்கு ராஜகோபுரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

எங்கள் சூரியத் தேவனுக்கு ராஜகோபுரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

November 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures