Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாலியல் துஷ்பிரயோகம் ; இருவருக்கு கடூழிய சிறை தண்டனை – கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு

August 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் பதிநான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மற்றுமொரு 18 வயதுடைய இளைஞனுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில்  14 வயதுடைய சிறுமி ஒருவரை அவரது பாதுகாவலரிடம் இருந்து கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பத்து ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த 14 வயதுச் சிறுமியை அவரது பாதுகாவலர்களிடமிருந்து கவர்ந்து சென்ற குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தண்டப்பணம் செலுத்த தவறும் சந்தர்ப்பத்தில் பன்னிரெண்டு மாத கால சாதாரண சிறைத் தண்டனை  அனுபவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும்,  இழப்பீடு செலுத்த தவறின் பன்னிரெண்டு மாத கால சாதாரண சிறைத் தண்டனை  அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேநேரம்  கடந்த 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதினைந்து வயதும் எட்டு மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை பதினெட்டு வயதுடைய இளைஞர் ஒருவர் பாடசாலை கல்வியை தொடர்ந்த சந்தர்ப்பத்தில் காதலித்து, குறித்த சிறுமியை  பாதுகாவலரிடம் இருந்து கவர்ந்து சென்று திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிரான வழக்கு வியாழக்கிழமை (10) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் குற்றவாளியாக இனம் கானப்பட்ட இளைஞர் அவரது பாடசாலைக் காலத்தில் குற்றத்தை அறியாது திருமணமாகி குடும்பத்துடன் வாழும் எண்ணத்தில் சிறுமியை அழைத்து சென்றதாகவும் சிறுமியும் முழுமையான விருப்பத்துடன் அவருடன் சென்று வாழ்ந்த நிலையில் குறித்த சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி, விடயங்களை கவனத்திலெடுத்த மன்று இளைஞனுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா பத்தாயிரம் ரூபா வீதம் நாற்பதாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் தலா ஆறுமாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றத்திற்கு பத்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்குகள் இரண்டும்  கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் அவர்கள் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொலிஸாரிடம் சரணடைய தயார் : சாமர சம்பத் தசநாயக்க பகிரங்க அறிவிப்பு

Next Post

வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்

Next Post
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures