முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (19.06.2023) நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம்
இதன்போது, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் இடையூறு ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தப் போராட்டம் தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











