Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்தவின் அரசியல் ஆளுமை கோட்டாவிடம் இல்லை | ரோஹித அபேகுணவர்தன

June 12, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மஹிந்தவின் அரசியல் ஆளுமை கோட்டாவிடம் இல்லை | ரோஹித அபேகுணவர்தன

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்திருந்தால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் இன்றும் நிலைத்திருந்திருக்கும்.

பொதுஜன பெரமுனவை புறக்கணித்து இனிவரும் காலங்களில் எவராலும் அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அளுத்கம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.மக்களின் எதிர்பார்த்தை எம்மால் நிறைவேற்ற முடியவில்லை.

நிறைவேற்றுத்துறையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட முடியாது.அரச தலைவர் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆளுமை கோட்டபய ராஜபக்ஷவிற்கு இருந்திருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் இன்றும் ஆட்சியில் இருந்திருக்கும்.பொருளாதார பாதிப்பு பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதிக்கு இறங்கி போராடினார்கள் .மக்கள் போராட்டத்தை குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுபவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.இதன் காரணமாகவே பொதுஜன பெரமுனவின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை புறக்கணித்து செயற்பட ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.பொதுஜன பெரமுன அரசியலில் என்றும் இரண்டாம் பட்சமாகாது.

எமது ஆதரவு இல்லாமல் இனிவரும் காலங்களில் எவருக்கும் அரசாங்கத்தை அமைக்கவும் முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

Previous Post

வடக்கின் நிலைமை பற்றி சார்ள்ஸ் | சுமந்திரன் பேச்சு

Next Post

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்!

Next Post
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்!

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டில் மீண்டும் இனவாதத்தையும், மதப் பிரிவினையும் தூண்டுவதற்கு இடமளிக்கப் போவதில்லை – ஆனந்த விஜேயபால

விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி போலி பிரசாரம்: சபையில் தெளிவுபடுத்திய விஜேபால

August 21, 2026
நடிகர் சாய்ரா நடிக்கும் ‘ஹலோ மிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சாய்ரா நடிக்கும் ‘ஹலோ மிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 21, 2026
நடிகை கௌரி கிஷன் நடிக்கும் ‘தாரகை’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை கௌரி கிஷன் நடிக்கும் ‘தாரகை’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 20, 2026
இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாது என்பதில் எந்த உண்மையும் இல்லை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

August 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures