Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல் ; மார்ச் 31 இல் ஆரம்பம்

March 29, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல் ; மார்ச் 31 இல் ஆரம்பம்

உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் இண்டியன் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் மார்ச் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி அஹமதாபாத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய பத்து அணிகள் பங்குபற்றுகின்றன.

நான்கு வருடங்களின் பின்னர் பழைய முறைமைப்படி சகல அணிகளும் சொந்த மைதானத்திலும், அந்நிய மைதானத்திலும் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் எல்பிஎல் சுற்றுப் போட்டி நடைபெறவிருக்கிறது.

மார்ச் 31ஆம் திகதி ஆரம்பித்து எட்டு வாரங்கள் தொடரும் 16ஆவது எல்பிஎல் அத்தியாயத்தில் 74 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக கடைசி 3 அத்தியாயங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய மைதானங்களிலேயே நடத்தப்பட்டன. 2020இல் இந்தியாவுக்கு வெளியே ஐக்கிய அரபு இராச்சியத்தில் முழுப் போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2021இல் ஆரம்பப் போட்டிகள் இந்தியாவின் சில மைதானங்களிலும் கடைசிப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் அரங்கேறின. 2022இல் லீக் போட்டிகள் மும்பை, புனே ஆகிய மைதானங்களிலும் இறுதிச் சுற்று கொல்கத்தா, அஹமதாபாத் மைதானங்களிலும் நடத்தப்பட்டன.

இருபது 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கிண்ணஸ் சாதனையை ஏற்படுத்தும் வகையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் 101,556 இரசிகர்கள் 2022 இறுதிப் போட்டியைக் கண்டுகளித்தனர்.

அந்த இறுதிப் போட்டியில்  முதலாவது எல்பிஎல் சம்பியன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை  முற்றிலும் எதிர்பாராத விதமாக  7 விக்கெட்களால் வெற்றிகொண்ட ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் சம்பியனாகியிருந்தது.

குஜராத் டைட்டன்ஸ் தனது அறிமுக அத்தியாயத்திலேயே சம்பியனானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

போட்டி முறைமை

2023 ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் பத்து அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளை சொந்த மைதானத்திலும் 7 போட்டிகளை அந்நிய மைதானத்திலும் விளையாடவேண்டும்.

10 அணிகளும் 2 குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒரு குழுவில் இடம்பெறும் அணிகள் ஒன்றையொன்று சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் 2 தடவைகள் எதிர்த்தாடும். அதாவது ஒவ்வொரு அணியும் தத்தமது குழுவில் 8 போட்டிகளில் விளையாடும். அதேவேளை மற்றைய குழுவில் இடம்பெறும் 4 அணிகளை ஓரு தடவையும் எஞ்சியிருக்கும் அணியை 2 தடவைகளும் எதிர்த்தாடும்.

இறுதிச் சுற்று (ப்ளே ஓவ்ஸ்)

இறுதிச் சுற்று 4 போட்டிகளைக் கொண்டதாகும்.

லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் முதலாவது தகுதிகாண் சுற்றில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

அணிகள் நிலையில் 3ஆம், 4ஆம் இடங்களைப் பெறும் அணிகள் நீக்கல் போட்டியில் விளையாடும். நீக்கல் போட்டியில் வெற்றிபெறும் அணி முதலாவது தகுதிகாணில் தோல்வி அடைந்த அணியை 2ஆவது தகுதிகாண் போட்டியில் சந்திக்கும்.

இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதலாவது தகுதிகாண் போட்டியில் வெற்றியீட்டிய அணியை 16ஆவது ஐபிஎல் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும்

அணித் தலைவர்கள்

சென்னை சுப்பர் கிங்ஸ்: மஹேந்த்ர சிங் தோனி.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ்: டேவிட் வோர்னர்.

குஜராத் டைட்டன்ஸ்: ஹார்திக் பாண்டியா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பதில் தலைவர் நிட்டிஷ் ரானா (வழமையான அணித் தலைவர்  ஷ்ரேயாஸ் ஐயர் உபாதையிலிருந்து மீளவில்லை).

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்: கே. எல். ராகுல்.

மும்பை இண்டியன்ஸ்: ரோஹித் ஷர்மா.

பஞ்சாப் கிங்ஸ்: ஷிக்கர் தவான்.

ராஜஸ்தான் றோயல்ஸ்: சஞ்சு செம்சன்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: பவ் டு ப்ளெசிஸ்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஏய்டன் மார்க்ராம்.

Previous Post

இறக்குமதியாகும் முட்டைகள் பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றவை 

Next Post

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

Next Post
DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் - விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures