Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

IMF தந்த தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது | ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

March 26, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? | ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதற்கட்டமாகப் பெற்றுக் கொண்ட 330 மில்லியன் டொலரில் , 121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

இவ்வாறு கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளமையானது , கடன் ஸ்திரத்தன்மையை பேணுவதற் உதவுவதோடு , எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையை காப்பாற்றுவதில் சாதகமான தாக்கத்தை செலுத்தும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஏனைய சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பெற்றுக் கொள்ளப்பட்டால் அது மத்திய வங்கியின் கையிருப்பில் காணப்படும்.

எவ்வாறிருப்பினும் இம்முறை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகையை விசேட தேவைகளுக்காக பயன்படுத்த முடியும். கடந்த வியாழனன்று முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றது.

இதனை செலவிடும் போது மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்ட வேண்டியுள்ளது.

கடன் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இக்கடன் தொகையைப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம். கடந்த காலங்களில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாம் பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொண்டோம்.

அதற்கமைய இந்தியாவிற்கு செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையில் முதற்கட்டமாக 121 மில்லியன் மீள செலுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் , எமக்கு உதவிய நாடுகளின் நம்பிக்கையை காப்பாற்றுதல் என்வற்றில் இது தாக்கம் செலுத்துகிறது.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பத்தினைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

இதன் போது சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவும் , வாக்கெடுப்பில் பங்குபற்றவும் முடியும்.

தற்போதைய சூழலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஏற்றுக்கொண்ட ஒரு விடயத்தை , தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பார்களானால் மிக இலகுவாக எதிர்க்கட்சிகளால் வரலாற்றில் இடம்பிடிக்க முடியும் என்றார்.

Previous Post

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற வேண்டும் | ராமதாஸ் வலியுறுத்தல்

Next Post

வடக்கில் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பெரும் பிரச்சினை | வசந்த முதலிகே

Next Post
வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மகிழ்ச்சி

வடக்கில் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பெரும் பிரச்சினை | வசந்த முதலிகே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures