Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு பயிற்சி பெற்றேன் | சாக்ஷி அகர்வால்

February 20, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு பயிற்சி பெற்றேன் | சாக்ஷி அகர்வால்

”நான் கடவுள் இல்லை என்ற படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கு முறையாக பயிற்சி எடுத்துக்கொண்ட பின்னரே நடித்தேன்” என அப்படத்தின் நாயகியான சாக்ஷி அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

இணையத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, இணையவாசிகளை எப்போதும் தொடர்பில் வைத்திருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால். 

இவர் கதாநாயகியாக நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’.  இந்த படத்தில் பெற்ற அனுபவங்கள் குறித்து அவர் பேசுகையில், 

”பொதுவாக எம்முடைய பெற்றோர்கள் நான் நடிக்கும் படங்களை படமாளிகைக்கு சென்று கண்டு ரசிக்க மாட்டார்கள். ஆனால், முதன்முறையாக எனது நடிப்பில் வெளியான ‘நான் கடவுள் இல்லை’ என்ற திரைப்படத்தை பட மாளிகைக்குச் சென்று மூன்று முறை கண்டு ரசித்திருக்கிறார்கள். 

எனது கதாபாத்திரம் நன்றாக இருந்தது என்று அவர்கள் தெரிவித்தபோது மனதில் உற்சாகம் ஊற்றெடுத்தது.

மேலும் இந்தத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் இனியா ஆகியோருடன் நடித்த அனுபவமும் மறக்க இயலாதது. படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் எமக்கு வழங்கிய அறிவுரை மதிப்புமிக்கது. 

எஸ்.ஏ. சந்திரசேகர் போன்ற அனுபவம் மிக்க மூத்த இயக்குநரின் இயக்கத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 

எம்முடைய திரையுலக பயணத்தில் மூத்த இயக்குநருடன் பணியாற்றுவது இதுதான் முதல் முறை. படப்பிடிப்பின் தொடக்கத்தில் பயமும் பதற்றமும் இருந்தது. அவர் சண்டை காட்சிகளில் டூப் கலைஞர்களை பயன்படுத்தாமல் நேரடியாக சண்டைக் காட்சிகளில் நடிக்கலாமே என எம்மிடம் சொன்னதும், இதனை கட்டளையாக ஏற்றுக்கொண்டு, திரையுலக சண்டை பயிற்சி இயக்குநர் கனல் கண்ணனிடம் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சி பெற்றேன். 

அதன் பின்னர் எக்ஸன் காட்சிகள் தொடர்பான காணொளிகளை கண்டு எம்முடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு பிறகே நடித்தேன். 

எம்முடைய நேர்த்தியான உழைப்பை கண்ட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் படத்தின் இரண்டாம் பாதியில் மட்டுமல்லாமல் முதல் பாதியிலும் எமக்கென சில சண்டை காட்சிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். 

இது எம்முடைய முன்னேற்றத்துக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் நடித்த பிறகு கதாநாயகியாக நடிப்பதை விட கதையின் நாயகியாக நடிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் வளர்த்துக்கொண்டதாக கருதுகிறேன். இதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” என்றார்.

இதனிடையே நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது ‘பஹிரா’, ‘கெஸ்ட் சாப்டர் 2’, ‘தி நைட்’, ‘புரவி’, ‘குறுக்கு வழி’, ‘120 ஹவர்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்த அர்ஜுன் சம்பத்

Next Post
மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்த அர்ஜுன் சம்பத்

மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்த அர்ஜுன் சம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures