Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகளிர் டி20 உலகக் கிண்ண ஆரம்ப் போட்டியில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

February 12, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
மகளிர் டி20 உலகக் கிண்ண ஆரம்ப் போட்டியில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவை 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டி ஒன்றில் 2016க்குப் பின்னர் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

அணித் தலைவி சமரி அத்தபத்து மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 50 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றிக்கு அடிகோலியிருந்தார். இதன் மூலம் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக அதிகூடிய தனிநபருக்கான எண்ணிக்கையை சமரி அத்தபத்து பதிவு செய்தார்.

சமரி அத்தப்பத்துவைத் தொடர்ந்து இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, ஓஷாதி ரணசிங்க ஆகியோர் துல்லியமாக பந்துவீசி தென் ஆபிரிக்காவின் பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கட்டுப்படுத்தினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 3 ஓவர்களில் 4 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை பெற்றிருந்தது. ஆனால், சிறுக சிறுக வேகமாக ஓட்டங்களைப் பெறத் தொடங்கிய அத்தபத்து, அணி நல்ல நிலையை அடைய உதவினார்.

மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது அத்தபத்துவின் சக ஆரம்ப வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (28 – 1 விக்.)

அதன் பின்னர் அத்தபத்துவுடன் ஜோடி சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணித் தலைவி விஷ்மி குணரட்ன திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிளுடன் 35 ஓட்டங்களைப் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 94 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

18ஆவது ஓவரின் முதலாவது பந்தில் விஷ்மி ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் அத்தபத்துவும் களம் விட்டகன்றார். சமரி அத்தபத்து 12 பவுண்டறிகள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றார்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப், ஷப்மின் இஸ்மாயில், நாடின் டி க்ளார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

சுமாரான 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவி சுனே லுஸ் 28 ஓட்டங்களையும் லோரா வுல்வார்ட்18 ஓட்டங்களையும் சினாலோ ஜவ்டா 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் இனோக்கா ரணவீர 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஓஷதி ரணசிங்க 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சுகந்திகா ரணசிங்க 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Previous Post

மட்டக்களப்பு மைக்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறுமா?

Next Post

ரோஹித் குவித்த சதம், ஜடேஜா, பட்டேல் பெற்ற அரைச் சதங்களால் பலமான நிலையில் இந்தியா

Next Post
ரோஹித் குவித்த சதம், ஜடேஜா, பட்டேல் பெற்ற அரைச் சதங்களால் பலமான நிலையில் இந்தியா

ரோஹித் குவித்த சதம், ஜடேஜா, பட்டேல் பெற்ற அரைச் சதங்களால் பலமான நிலையில் இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures