Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு

February 11, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் தோஸ்த்’ திட்டத்தின் கீழ், பூகம்ப நிவாரணப் பணிகளுக்காக மீட்புப் பணியாளர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் ஆறு விமானங்களை துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா அனுப்பியுள்ளது.

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை இந்திய மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து, இந்திய தேசிய பாதுகாப்பு மீட்புப் படையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய தேசிய பாதுகாப்பு மீட்புப் படை குறித்து பெருமைக் கொள்கிறோம். துருக்கியில் நடந்த மீட்புப் பணிகளில், காஜியான்டெப் நகரில் ஐஎன்டி-11 என்ற குழு பெரன் என்ற 6 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றியது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய மீட்பு படையினரை உலகின் முன்னணி பேரிடர் மீட்புப் படையாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Previous Post

இலங்கை ஜப்பான் நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும் | ஜப்பான்

Next Post

சக்திவாய்ந்த பூகம்பத்தால் நகர்ந்த துருக்கி | ஆய்வில் தகவல்

Next Post
சக்திவாய்ந்த பூகம்பத்தால் நகர்ந்த துருக்கி | ஆய்வில் தகவல்

சக்திவாய்ந்த பூகம்பத்தால் நகர்ந்த துருக்கி | ஆய்வில் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures