Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி | தென் ஆபிரிக்காவின் உலகக் கிண்ண நேரடி தகுதிக்கு தாமதம்

February 2, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி | தென் ஆபிரிக்காவின் உலகக் கிண்ண நேரடி தகுதிக்கு தாமதம்

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கிம்பர்ளி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜொஸ் பட்லர் குவித்த அபார சதமும் ஜொவ்ரா ஆச்சரின் சிறப்பான பந்துவீச்சும் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

எனினும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா தனதாக்கிக்கொண்டது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபற்றும் தென் ஆபிரிக்காவின் வாய்ப்பு சற்று தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 79 புள்ளிகளுடன் தற்போது 9ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா, தனது சொந்த மண்ணில் நெதர்லாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் முழுமையாக வெற்றிபெற்றால் உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபற்ற வாய்ப்பு கிடைக்கும்.

புதன்கிழமை நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 346 ஓட்டங்களைக் குவித்தது.

போட்டியின் 6ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது இங்கிலாந்து அதன் 3ஆவது விக்கெட்டை இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், டேவிட் மாலன், அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 232 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை பலப்படுத்தினர். சகல நாடுகளுக்கும் எதிராக இங்கிலாந்து சார்பாக 4ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும்.

டேவிட் மாலன் 114 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது 3ஆவது சர்வதேச ஒருநாள் சதமாகும்.

11ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்த ஜொஸ் பட்லர் 127 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 6 பவுண்டறிகளுடன் 131 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர்களை விட மொயீன் அலி 41 ஓட்டங்களைப் பெற்றார்.;

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் லுங்கி நிகிடி 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

347 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 43.1 ஓவர்களில் 287 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த இங்கிலாந்து 31ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

டெம்பா பவுமா (38), ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (52) ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து 3ஆவது விக்கெட்டில் ரீஸா ஹெண்ட்றிக்ஸுடன் ஏய்டன் மார்க்ராம் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர் 39 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். (158 – 43 விக்.)

தொடர்ந்து டேவிட் மில்லர் (13), மார்க்கோ ஜென்சன் (12) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர். (193 – 6 விக்.)

எவ்வாறாயினும் ஹெய்ன்றிச் க்ளாசென், வேய்ன் பார்னல் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஒரளவு பலம் சேர்த்தனர். க்ளாசென் 80 ஒட்டங்களையும் பார்னல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

உபாதை காரணமாக 28 மாதங்களின் பின்னர் மீண்டும் விளையாட ஆரம்பித்த ஜொவ்ரா ஆச்சர் மீள்வருகையில் 2ஆவது போட்டியில் 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.

அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய ஆதில் ராஷித் 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய 2 விருதுகளையும் ஜொஸ் பட்லர் வென்றெடுத்தார்.

Previous Post

அமெரிக்கா- தென் கொரியா கூட்டு வான்வழி போர்ப் பயிற்சி

Next Post

மீண்டும் வலைத்தள தொடரில் நடிக்கும் சமந்தா

Next Post
புது அவதாரம் | ரொமாண்டிக் பேண்டஸி படத்தில் சமந்தா

மீண்டும் வலைத்தள தொடரில் நடிக்கும் சமந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures