Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கல்லூரி காலத்தை நினைவூட்டும் ‘எங்க ஹாஸ்டல்’ வலைத்தள தொடர்

January 26, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
கல்லூரி காலத்தை நினைவூட்டும் ‘எங்க ஹாஸ்டல்’ வலைத்தள தொடர்

இந்தியாவில் அதிகளவிலான பார்வையாளர்களால் விரும்பி ரசித்து கொண்டாடப்பட்ட வலைத்தள தொடரான ‘ஹொஸ்டல் டேஸ்’ எனும் தொடரின் தமிழ் பதிப்பாக ‘எங்க ஹாஸ்டல்’ எனும் புதிய வலைத்தள தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி முதல் வெளியாகிறது.

‌இந்த தொடரில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் பற்றிய விபரக் குறிப்புகளை இத்தொடர் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

தி வைரல் ஃபீவர் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த தொடரை சதீஷ் சந்திரசேகர் இயக்கியிருக்கிறார். இந்த தொடரில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கௌதம் ராஜ், டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் தயாராகியிருக்கிறது.

கனவுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்துகொண்டு, உற்சாகத்துடன் இளமை துள்ளும் பருவ வயதுடன் கல்லூரியின் விடுதிக்குள் காலடி எடுத்து வைக்கும் இளைஞர்களின் அந்த காலகட்ட வாழ்வியலை இந்தத் தொடர் சித்திரிக்கிறது.

குறிப்பாக, விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடையே ஏற்படும் நட்பு, காதல், மோதல், சண்டை, தேர்வு, தேர்வு குறித்த தயாரிப்பு போன்றவற்றை மையப்படுத்தி இந்த தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதில் அவினாஷ் ரமேஷ் சித்தப்புவாகவும், சச்சின் நாச்சியப்பன் அஜய்யாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் ‘அஹானா’ எனும் வட இந்திய மாணவியாகவும், சரண்யா ரவிச்சந்திரன் ‘ராஜா’ எனும் அப்பாவி தமிழ்ப் பெண்ணாகவும், கௌதம் ராஜ் செந்திலாகவும், டிராவிட் செல்வம் ‘தொழில் முனைவோர் பாண்டியன் எனும் ஜெய வீர பாண்டியனாகவும் நடித்திருக்கிறார்கள்.

அமேசான் ப்ரைம் வீடியோவின் வலைத்தள தொடர்களுக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துவருவது அதிகரித்திருப்பதால், இளமை குறும்புடன் தயாராகியிருக்கும் ‘எங்க ஹாஸ்டல்’ எனும் புதிய வலைத்தள தொடருக்கும் பாரியளவில் வரவேற்பு கிடைக்கும் என அவதானிக்கப்படுகிறது.

Previous Post

தேசிய தினமா ஆக்கிரமிப்பு தினமா பிளவுபட்டு நிற்கும் அவுஸ்திரேலியா

Next Post

வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்த கோட்டாபய தமிழர்கள் தொடர்பில் பிறப்பித்த ஆணை

Next Post
மாதாந்த செலவுகளுக்காக பெருந்தொகை பணத்தை செலவிடும் கோட்டாபய ராஜபக்ச

வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்த கோட்டாபய தமிழர்கள் தொடர்பில் பிறப்பித்த ஆணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures