Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆஸியில் இந்திய சினிமாக்களுக்கு ஈடிணையற்ற புலம்பெயர் கலைஞர்களின் படைப்பில் “பொய்மான்” திரைப்படம்

January 15, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ஆஸியில் இந்திய சினிமாக்களுக்கு ஈடிணையற்ற புலம்பெயர் கலைஞர்களின் படைப்பில் “பொய்மான்” திரைப்படம்
  • ஐங்கரன் விக்கினேஸ்வரா

அவுஸ்திரேலிய மண்ணில் ஷோபனம் கிரியேஷன்ஸ் கலைஞர்களால் உருவாகியுள்ள “பொய்மான்” திரைப்படம், தமிழ்க் கலைஞர்களின் அரியதொரு படைப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கங்காரு தேச தமிழ் சினிமா படைப்பாற்றலில் இத்திரைப்படம் ஓர் மைல்கல்லாக தடம் பதிக்கும் என்றும் எதிர்வு கூறலாம்.

அவுஸ்திரேலிய மண்ணில் உருவாகிய “பொய்மான்”

விரைவில் ஆஸ்திரேலிய திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “பொய் மான்”. இவ் முழுநீள திரைப்படத்தில் ஜனார்தன், கவிஜா, ஜெயமோகன், ஷர்மினி நடித்துள்ளனர். ஷோபனம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில்
புற்றுநோய் மருத்துவராகவும், மேடை நாடகம், குறும்பட இயக்குனாராகவும் நன்கு அறியப்படும் மருத்துவர் ஜெயமோகன் முழுநேர திரைப்பட இயக்குனாராக அறிமுகமாகிறார்.

இந்திய சினிமாக்களுக்கு ஒப்பாக போட்டி போடும் வகையில்,புலம்பெயர் இளங் கலைஞர்களின் படைப்பாற்றலில் அவுஸ்திரேலியாவில் உருவாகிய “பொய்மான்” திரைப்படம் தமிழ் சினிமா உலகில் ஓர் வரலாற்றுச் சாதனை படைக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ஒரு கப்புசினோ காதல் மற்றும் பூமராங் போன்ற பாராட்டப்பட்ட குறும்படங்களையும் இயக்கிய டாக்டர் ஜே ஜெயமோகன் எழுதி இயக்கியுள்ளார். இயக்குனர் ஜெயமோகனின் இரண்டு குறும்படங்களும் உலகளவில் 50,000க்கும் அதிகமான பார்வைகளுடன் பலத்த பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.

பொய் மான் திரைப்படத்தின் எடிட்டிங்கை செந்தில்குமார் ஆர் மற்றும் ஹரிஷ் செய்துள்ளனர். கலை இயக்கம் பணியை ஷாமினின் சி ஆற்றியுள்ளனர்.

இத்திரைஇசை பாடல்களின் வரிகளை பாரதியார், குவேந்திரன், ஜெயமோகன், ஆதி எழுதியுள்ளனர். பொய்மான் படத்தின் இசையை சாரு ராம், ஆதி, குரு பி ஆகியோர் மெருகூட்டியுள்ளனர்.

பலத்த எதிர் பார்ப்புகளுடன் வெளிவரும் பொய்மான் பாடல்களை கலைமாமணி பூஷணி கல்யாணராமன், கிரே , ஆர்.பி ஷ்ரவன் (சூப்பர் சிங்கர்), ஆதி ஆகிய பாடகர்கள் பாடியுள்ளனர்.

யாழில் திரைப்பட இசை வெளியீட்டு விழா:

அவுஸ்திரேலிய தயாரிப்பான “பொய்மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீடு 11/01/2023 புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக நடைபெற்றது.

ஜெயமோகன் இயக்கிய “பொய்மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பிரபல கலைஞர்களுடன்
நடைபெற்றுள்ளது. புலம்பெயர்ந்த இளங் கலைஞர்களை உள்ளடக்கிய முழு நீள திரைப்படமான பொய்மான், இந்திய திரைப்படங்களைப் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களை இணைத்து இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளதும் பாராட்டத்தக்கதே.

இப்படம் வெளிநாடுகளில் இம்மாத இறுதியிலும், அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கையிலும் வெளியாகவுள்ளது. அவுஸ்திரேலிய மண்ணில் உருவாகிய “பொய்மான்” திரைப்படம் சாதனை படைக்குமா என்பதனை காலம் பதில் சொல்லும்.

Previous Post

சிறந்த மனிதனாக வாழ நல் வழிகள்

Next Post

அரங்கு நிறைந்த மக்கள் | தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு

Next Post
அரங்கு நிறைந்த மக்கள் | தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு

அரங்கு நிறைந்த மக்கள் | தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures