உலகின் முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான நயோமி ஒசாகா, தான் கர்ப்பிணியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து தான் விலகுவாக நயோமி ஒசாகா ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தான் கர்ப்பிணியாக உள்ளதை அவர் தெரிவித்துள்ளார் 2024 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளில் விளையாடுவதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
25 வயதான ஜப்பானிய வீராங்கனையான நயோமி ஒசாகா 4 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை வென்றவர்.
2018, 2020 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க பகிரங்க சம்பியன்ஷிப் போட்டிகளிலும் 2019, 2021 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டிகளிலும் அவர் சம்பியனானார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் கோடேயை நயோமி ஒசாகா நீண்;டகாலமாக காதலித்து வருகிறார்.