Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கர்நாடகாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது | என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

January 13, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்த சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதாக கடந்த நவம்பர் 4-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்தது.

இதுகுறித்து பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிமோகா, ஹாவேரி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஷிமோகாவை சேர்ந்த சையத் யாசின், மாஸ் முனீர் உள்ளிட்ட 4 பேர் சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த 4 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் ஷிமோகாவில் கைது செய்தனர். கைதான மாஸ் முனீர், சையத் யாசின் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது ஷிமோகா, மங்களூரு, ஹாவேரி ஆகிய இடங்களில் முகாமிட்டு 30 வயதுக்கும்குறைவான இளைஞர்களை ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தக்ஷின கன்னடா, ஹாவேரி ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினர். அதில் தக்ஷின கன்னடாவை சேர்ந்த மசீம் அப்துல் ரஹ்மான், ஹாவேரியை சேர்ந்த நதீம் அஹமது ஆகிய இருவரும் சிக்கினர். இந்த 2 பேரும் சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மசீம் அப்துல் ரஹ்மான் ஷிமோகாவில் கைது செய்யப்பட்ட சையத் யாசினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி மங்களூருவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஹாவேரியை சேர்ந்த நதீம் அஹமது, மாஸ் முனீருடன் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களில் 5 முறை மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்குள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களை சந்தித்ததாக என்ஐஏ அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 ஆண்டு சிறை: கேரளாவை சேர்ந்த ஐ.எஸ்.ஆதரவு தீவிரவாதிகள் பிரபலங்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) தகவல்கிடைத்தது. இதன்பேரில் கடந்த2020-ம் ஆண்டு டெல்லி விமானநிலையத்தில் முகமது என்பவர்கைது செய்யப்பட்டார். கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Previous Post

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் | சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம்

Next Post

கர்ப்பமடைந்துள்ளதாக நயோமி ஒசாகா அறிவிப்பு | அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளிலிருந்து விலகல்

Next Post
கர்ப்பமடைந்துள்ளதாக நயோமி ஒசாகா அறிவிப்பு | அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளிலிருந்து விலகல்

கர்ப்பமடைந்துள்ளதாக நயோமி ஒசாகா அறிவிப்பு | அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளிலிருந்து விலகல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures