Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மனச்சோர்வுக்கு மருந்தாகும் ‘நித்தம் ஒரு வானம்’

September 25, 2022
in Cinema, News
0

முன்னணி நட்சத்திர நடிகராக வளர்ந்து வரும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான ‘நித்தம் ஒரு வானம்’ பார்வையாளர்களின் மனச்சோர்வுக்கு மருந்தாக இருக்கும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ராஜசேகர், ரித்து வர்மா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார். பயணத்தையும், காதலையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் ரூபக் பிரணவ் தேஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு அனைவரும் தங்களுக்குள் ஏற்பட்ட மன சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறார்கள்.

ஏனெனில் பயணம் என்பது உளவியல் ரீதியாக மனச்சோர்வுக்கு மருந்தாகும் விடயம். மேலும் பயணங்கள் பல நேர்மறையான அதிர்வுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

‘நித்தம் ஒரு வானம்’ படத்தை பட மாளிகைகளில் பார்த்துவிட்டு திரும்பும் போது மனதில் புத்துணர்ச்சியும், உதட்டில் புன்னகையும் நிச்சயம் இருக்கும்.

இதனை மையப்படுத்தி தான் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்று வெவ்வேறு நிலப்பரப்புகளில் பயணம் மேற்கொள்ளும் நாயகனின் வாழ்வில் குறிக்கிடும் மூன்று நாயகிகளும்,  அதன் தொடர்பான சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் காதலைப் பற்றிய திரைப்படம் என்பதாலும், மூன்று இளம் முன்னணி நட்சத்திர நடிகைகள் நடித்திருப்பதாலும், ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது | ஜெய்சங்கர்

Next Post

கொவிட் வதந்திகளுக்காய் சீனாவில் இணைய பாவனையாளர்கள் கைது

Next Post
இலங்கையில் தொலைபேசி, இணைய பாவனையாளர்களுக்கான அறிவிப்பு | கட்டண அதிகரிப்பு

கொவிட் வதந்திகளுக்காய் சீனாவில் இணைய பாவனையாளர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures