Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நல்ல மணப்பெண்ணுக்காக காத்திருப்பதில் தவறு இல்லை- நடிகர் சிம்பு

September 11, 2022
in Cinema, News
0
மீண்டும் ஆன்மீக பயணம் மேற்கொண்ட சிம்பு

கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக சிம்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக சிம்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, “வித்தியாசமான கதைகளில் நடிக்க விரும்புகிறேன். மாநாடு படம் அந்த முயற்சியில் வந்து வெற்றியும் பெற்றது. மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அதுபோல் இன்னொரு மாறுபட்ட கதை அம்சத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நான் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் தயாராகி உள்ளது.

சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமான படமாக இருக்கும். இதில் 3 தோற்றங்களில் வருகிறேன். 19 வயது இளைஞனாகவும் என்னை உருமாற்றி நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் படத்தில் உள்ளன. இது வெற்றி பெற்றால் 2-ம் பாகமும் வரும். ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் நடிப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும். ரஜினி, அஜித்குமார், விஜய் என்று யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.

எனது திருமணம் குறித்து யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அது நடக்கிற நேரத்தில் நடக்கும். நிறைய 2-வது, 3-வது திருமணங்கள் நடக்கின்றன. சிலர் காதலித்து விட்டு பிறகு பிரிகிறார்கள். விவாகரத்துகளும் நடக்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எனவே இதுமாதிரி பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நல்ல மணப்பெண் அமைய காத்து இருப்பதில் தவறு இல்லை. நல்ல மணப்பெண்ணுக்காக காத்து இருக்கிறேன். ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.

முத்த காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் போன்றவற்றை எனது படங்களில் திணிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். விரைவில் படம் டைரக்டு செய்வேன். இதற்காக 10 கதைகள் தயார் செய்து வைத்துள்ளேன்”.

இவ்வாறு சிம்பு கூறினார்.

Previous Post

அடுத்த வருடத்திற்கான ஆட்சேர்ப்பு முடக்கம்! அரச நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு

Next Post

கேப்டன் | திரைவிமர்சனம்

Next Post
கேப்டன் | திரைவிமர்சனம்

கேப்டன் | திரைவிமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures