Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்தவை ஏமாற்றிய கருணா – விபரம் உள்ளே

October 12, 2016
in News, Politics
0
மஹிந்தவை ஏமாற்றிய கருணா – விபரம் உள்ளே

மஹிந்தவை ஏமாற்றிய கருணா – விபரம் உள்ளே

கடந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய உறவினை கொண்டிருந்தார்.

வல்லரசு நாடான இந்தியாவினால் கூட வீழ்த்த முடியாமல் போன விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் ஒரு கருவியாக கருணாவை மஹிந்த ராஜபக்ச பயன்படுத்திக்கொண்டார் என்று கூட சொல்லாம்.

அவ்வளவு நெருக்கம் கொண்ட மஹிந்த ராஜபக்சவை விநாயகமூர்த்தி முரளிதரன் என்று அழைக்கப்படும் கருணா இன்று ஏமாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச தோல்வி கண்டிருந்தார். அவரின் தோல்விக்கு தமிழ் மக்களும் ஒரு காரணமாக அமைந்திருந்தனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள மஹிந்த ராஜபக்ச இன்று தனது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே தற்போது பாதயாத்திரை, மக்கள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு செயற்பாடுகளில் மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக மட்டக்களப்புக்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்தார்.

மஹிந்த ராஜபக்சவின் வருகையினையொட்டி மட்டக்களப்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதில் ஒரு சில தமிழ் அரசியல் வாதிகளும் கலந்துகொண்டனர்.

எனினும், மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் நெருங்கி செயற்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

கருணாவின் வருகையை எதிர்பார்த்திருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. எனினும், விநாயகமூர்த்தி முரளிதரன் இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

ஆட்சிக் கனவு பறிபோகும் அபாயத்தில் கோத்தபாயவின் கைப்பாவையாக மாறிப்போன மஹிந்த?

Next Post

போரின் வடுக்களுடன் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை

Next Post
போரின் வடுக்களுடன் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை

போரின் வடுக்களுடன் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures