Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

37, 300 மெட்ரிக் தொன் டீசலைப் பெற்றுக்கொள்ள 31 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

March 3, 2022
in News, Sri Lanka News
0
கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு  கொள்கலன்கள்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலிலிருந்து டீசல் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 31 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோலுடன் இலங்கை வரும் கப்பல்: வலுசக்தி அமைச்சு - தமிழ்வின்

இதனூடாக 37 300 மெட்ரிக் தொன் டீசல்  பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த கப்பலிலுள்ள டீசலை இறக்கும் பணிகள் வெகு விரைவில் முன்னெடுக்கப்படும் என்று வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி 37 500 மெட்ரிக் தொன் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்கு 35.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது. எரிபொருளை தடையின்றி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அடிக்கடி இவ்வாறு டொலரை செலுத்தி அவ்வப்போது எரிபொருள் பெற்றுக் கொள்ளப்பட்டாலும் , நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில செவ்வாயன்று எதிர்வரும் 4 நாட்களுக்கு மாத்திரமே போதுமான எரிபொருள் காணப்படுவதாகவும் , எரிபொருள் விநியோகத்தை நாளாந்தம் 3000 மெட்ரிக் தொன் என்றவாறு மட்டுப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐ.ஓ.சி. நிறுவனம் கடந்த மாதத்தில் மாத்திரம் இரு சந்தர்ப்பங்களில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தது. முழு உலகும் அதிர்ந்து போயுள்ள ரஷ்ய – உக்ரைன் மோதலால் உலக சந்தையில் எதிர்வரும் இரு வாரங்களுக்கும் மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 120 டொலர் வரை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையையும் பாதிக்கும் என்று அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அத்தோடு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரையில் எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை. எனினும் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தமையைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலையை அதிகரிப்பதற்கான கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைத்து வந்தது. எவ்வாறிருப்பினும் நிதி அமைச்சினால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ‘எரிபொருள் இல்லை’ என்று அறிவித்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் எரிபொருள் பாவனையாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். டீசல் மற்றும் பெற்றோல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களும் வாகனங்களும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாளாந்தம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கொரோனாவை ஒழித்துக்கட்டும் வேம்பு | ஆய்வில் தகவல்

Next Post

உக்ரேனில் இரண்டாவது இந்திய மாணவர் உயிரிழப்பு

Next Post
உக்ரேனில் இரண்டாவது இந்திய மாணவர் உயிரிழப்பு

உக்ரேனில் இரண்டாவது இந்திய மாணவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures