யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்35 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுப் புறப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் முகமாக விசேட போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (03) வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை(05) வரை மூன்று தினங்களிலும் காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை, திருநெல்வேலிச் சந்தியில் இருந்து கொக்குவில் சந்தி நோக்கியஆடியபாதம், வீதியூடான பயணம் மேற்கொள்ள முடியும்.
மேலும், கொக்குவில் புகையிரதக் கடவை வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுவதுடன்,கொக்குவில் சந்தியில் இருந்து திருநெல்வேலி சந்தி வரை பயணிப்போர், பிறவுண் வீதி மற்றும் இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியை சென்றடைய மாற்றுப் பாதையைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பலாலி வீதி பரமேஸ்வரா சந்தியிலிருந்து, கலட்டி சந்தி வரையான போக்குவரத்தும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகின்றது என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]