‘இலத்திரனியல் எல்லைகள்’ திட்டத்தை அமுல்படுத்துவதில் மீண்டும் தாமதம்

‘இலத்திரனியல் எல்லைகள்’ திட்டத்தை அமுல்படுத்துவதில் மீண்டும் தாமதம்

கனடாவின் ‘இலத்திரனியல் எல்லைகள்’ என்று அழைக்கப்படும் (e-borders / Electronic Travel Authorization- eTA) ஐ அமுலாக்கம் செய்வது இரண்டாவது தடவையாகவும் பிற்போடப்பட்டுள்ளது.

eTA என அழைக்கப்படும் இலத்திரனியல் பயண அனுமதி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஏனைய விசா விலக்களிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கனடாவிற்கு வருகை தருவோருக்கு இவ்வருடம் மார்ச் மாதத்தில் இருந்து அமுலாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், கணனி தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினைகளினால் இந்த அமுலாக்கல் திகதி செப்டெம்பர் 30 வரை பிற்போடப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை இத்திட்டம் அமுல்படுத்தப்படாது என கனேடிய அரசு தற்போது அறிவித்துள்ளது.

இப்புதிய நடைமுறையால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய கனேடிய பிரஜைகள், கனேடிய இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள், விசா விலக்களிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆகியோர் போதியளவு ஆயத்தங்கள் செய்வதற்காக இந்நடைமுறை அமுல்படுத்தப்படுவது நவம்பர் 10 வரை தளர்த்தப்படுவதாக கனடாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *